Translate

Sunday, 5 February 2012

கனடாவில் கள்ளக் காட்: 3 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் !

Debit Card மோசடி தொடர்பில் ரொறோண்டோ பெரும்பாகத்தில் மூன்று தமிழர்கள் உட்பட 12 பேர் கைது. ரொறோண்டோ பெரும்பாகத்தில் Debit Card மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக Halton பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் மூவர் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்குள் 280 ATM இயந்திரங்களினூடாக சுமார் 0.5 மில்லியன் டொலர்கள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.


Debit தொடர்பான இரகசிய தகவல்கள் பெருமளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ATM இயந்திரங்களில் இருந்தே பெறப்பட்டிருக்கின்றது. புதிய Chip தொழில்நுட்பத்தில் அட்டைகள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கின்ற போதும், Chip இல்லாத அட்டைகளே அதிகளவில் மேசடி செய்யப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு பெரும் எண்ணிக்கையான போலி கடன் அட்டைகளும் கைது செய்யப்பட்டிருப்பவர்களிடம் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றது.

கைதுசெய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் ரொறோண்டோ, மார்க்கம் மற்றும் வோர்ன் (Vaughn) பகுதியைச் சேந்தவர்கள் என்றும், இது தொடர்பாக மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் ஒன்ராறியோ பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment