Translate

Sunday, 5 February 2012

மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!


யேர்மனியில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் சிறிலங்கா தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் யேர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.



தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் யேர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் (Carl Faller Institute) ஒன்று சிறிலங்காவின் மாணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது. இதை கண்ட இலங்கை தபால் அமைச்சர், Jeevan Kumaratunga , வீரப்பேச்சு விட்டு சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது யேர்மன் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை வெளியிட அனுமதி வழங்காமல் தமக்கு பெருமையை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று கூறினார்.
அத்தோடு Carl Faller Institute நிறுவனத்தின் இயக்குனர் யேர்மனியில் சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம் முத்திரைகள் வெளியீடு செய்வதற்கு எவ்வித இடமும் கிடையாது என்பதையும் உறுதியளித்தார்.

இவ் விடையம் நடந்து குறிகிய நாட்களின் பின்னரே யேர்மன் ஈழத்தமிழர்கள் தமது தேசியம் சார்ந்த முத்திரைகளை யேர்மன் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளியிட்டு வைத்தார்கள்.
இதன் ஊடாக மீண்டும் சிங்கள இனவெறி அரசின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது.
பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்! பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

No comments:

Post a Comment