Translate

Sunday, 5 February 2012

பாரதி கனவை நனவாக்கும் புரட்சி மற்றும் புதுமை பெண்க

ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட்': 427 சடலங்களை அடக்கம் செய்து சாதனை.......


சேலத்தில், இதுவரை அனாதையாக மீட்கப்பட்ட, 427 சடலங்களை, போலீஸிடம் பெற்று, இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்து, லைப் டிரஸ்ட் மகளிர் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.


கடந்த 20 ம் தேதி சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வாசலில், ஆண் பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சடலம் குறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் குறித்த துப்பு கிடைக்கவில்லை. சட்டப்படி, குறைந்தபட்சம் மூன்று நாள், அதிக பட்சம் ஐந்து நாள் வரை, ஜி.எச்., மார்ச்சுவரியில் வைத்திருந்து, பின், போலீசாரே அடக்கம் செய்யலாம். போலீசார், லைப் டிரஸ்ட் மூலம் ஆணின் சடலத்தை டி.வி.எஸ்., இடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆதரவற்ற சடலங்களுக்கு சேவை செய்யும் இக்குழு, இத்துடன், 427 சடலங்களை அடக்கம் செய்து, சாதனை பாதையை தொடர்ந்து வருகிறது.

கலைவாணி, குமுதவள்ளி, தேன்மொழி உள்ளிட்ட, பத்து பெண் உறுப்பினராக உள்ள லைப் டிரஸ்ட் குழுவினர் இதுகுறித்து கூறியதாவது: கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் ரோட்டோரம் பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த சடலத்தை பார்த்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் விலகி சென்றனர். அப்போதுதான், லைப் டிரஸ்ட் உருவாக்கும் எண்ணம் தோன்றியது. சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் கையில் இருந்து ஆளுக்கு, 50 ரூபாய், 100 ரூபாய் போட்டு முதலில் சடலத்தை அடக்கம் செய்தோம். இதற்கு முன், ஆம்புலன்சுக்கு, 1,000 ரூபாய், மாலை, பால், கோடித்துணி, சுடுகாட்டில் குழி வெட்ட கூலி என, 2,000 ஆயிரம் வரை செலவானது. சமீபத்தில், அனாதை சடலம் மட்டுமின்றி, அரசு மருத்துவமனையில் இறப்போரின் அனைத்து சடலங்களையும் எடுத்துச்செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இதனால், வாகன வாடகை, 1,000 ரூபாய் குறைந்துள்ளது. ஆனாலும், 2009ல் வாரத்திற்கு ஒன்றிரண்டு என, அனாதை சடலம் வந்தன. தற்போது மாதம், 30 சடலம் வரை அடக்கம் செய்கிறோம். இதற்காக, மாநகராட்சி சார்பில் கொடுத்த ஆம்புலன்ஸ் பழுதடைந்து விட்டது. இதில், சடலத்தை ஏற்றிச்செல்லும்போது, வாகனம் பழுதானால், தள்ளி விடக்கூட யாரும் வர மாட்டார்கள். இதனால் பணக்கஷ்டம் மட்டுமின்றி, மனக்கஷ்டம் கூட பல முறை ஏற்பட்டது உண்டு.

ஒரு சில சமயங்களில் அனாதை சடலம் என அடக்கம் செய்து இரண்டு, மூன்று நாள் கழித்து உறவினர்கள் வருவர். மரியாதையுடன் கவுரவமாக அடக்கம் செய்தது குறித்து கேள்விப்பட்டு, கண் கலங்க, நன்றி கூறி அழும் போது, அத்தனை கஷ்டங்களும் பறந்துவிடும். சேவை மனப்பான்மை எண்ணம் கொண்டவர்கள் விரும்பினால், சவ அடக்க செலவை ஏற்கலாம். மேலும் சிறு, சிறு உதவியை நேரடியாக கொடுத்து உதவலாம். லைப் டிரஸ்டில் சேர்ந்து சேவை செய்ய விரும்புவோர், சவ அடக்கத்திற்கு உதவுவோர், 94870 66238 என்ற மொஃபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அனாதை சடலங்களை அடக்கம் செய்வதால், சம்பந்தப்பட்டோர் ஆத்மா சாந்தியடையும். இந்த சேவையால் நமக்கும் புண்ணியம், ஆத்ம திருப்தி கிடைக்கும். இதைப்பார்த்து, மற்ற மாவட்டத்திலும் தனியார் அமைப்பு ஏற்படுத்தி, அனாதை சடலங்களை அடக்கம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment