Translate

Wednesday, 29 February 2012

உகண்டாவிடம் பிச்சை கேட்ட பீரிஸ்! பச்சைக்கொடி காட்டப்பட்டதா?

உகண்டாவிடம் பிச்சை கேட்ட பீரிஸ்! பச்சைக்கொடி காட்டப்பட்டதா?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, உகண்டாவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆதரவு கோரியுள்ளார்.


ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு கோரி ஆபிரிக்காவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நேற்று உகண்டாவின் உதவி அதிபர் எட்வேட் செகண்டி, பிரதமர் அமாமா பபாசி, வெளிவிவகார அமைச்சர் சாம் குரேசா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போதே சிறிலங்காவுக்கு ஆதரவு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தகவலை வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள், உகண்டா அரச தலைவர்கள் அதற்கு பச்சைக்கொடி காண்பித்தனரா என்பது பற்றிய தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் உகண்டாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment