மட்டக்களப்பு நகரில் 192 வருடங்களுக்கு முன்பு மெதடிஸ்த திருச் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் சரஸ்வதி சிலை வைக்கப்பட்டுள்ளமை பாடசாலையை கையளிக்கும் போது அரசாங்கத்தினால் திருச் சபைக்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்தை மீறும் செயல் என இலங்கை மெதடிஸ்த திருச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகக் குழு சிலை வைப்பது தொடர்பாக ஏற்கனவே தீர்மானம் எடுத்ததாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கூறுகின்றது.
பெரும் சர்சசையை ஏற்படுத்தியுள்ள இந்த சிலை விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை மெதடிஸ்த திருச் சபையின் உயர் மட்டக் குழுவொன்று கொழும்பிலிருந்து இன்று மட்டக்களப்பிற்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்தது.
இந்தச் சிலை விவகாரத்திற்கு சுமூகமான தீர்வொன்றைக் காண்பதற்கு தங்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காததன் காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றததை நாட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சபையின செயலாளரான அருட்திரு எஸ்.ஜே.கதிரேசபிள்ளை கூறுகின்றார்
அரசாங்கத்தினால் பாடசாலை 1961 ம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட போது, பாடசாலை மாணவர் அனுமதி, சிலை வைத்தல் உட்பட்ட விடயங்களில் மாற்றங்கள் செய்யதாயின் திருச் சபையின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அது தற்போது மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment