இந்த வாரத்தில் மட்டும் சுமார் 100 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் உறுதிசெய்துள்ளது. இதேவேளை இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாகவும், அங்கே படுகொலைகளும் சித்திரவதைகளும் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்து, தற்போது ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஆதரிக்கவும் உள்ளது.
ஆனால் இலங்கைக்கு தமிழர்களைத் திருப்பியும் அனுப்புவதாக ஸ்கை செய்திச் சேவை தெரிவித்துள்ளது. பிரித்தானியா ஏன் இவ்வாறு இரட்டைவேடம் போடுகிறது என அதுமேலும் கேள்வி எழுப்பியுள்ளது.இலங்கைக்கு ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட தமிழர் ஒருவர், இலங்கை இராணூவத்தால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு ஒன்றை அது ஆவணப்படுத்தியும் உள்ளது. தற்போது பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் உள்ள பல தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயத்தில் உள்ளனர். இவர்களில் பல தமிழ் இளைஞர்களும் பெண்களும் அடங்குவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. இவர்களில் ஆண்கள் சித்திரவதைகளையும், பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகலாம் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை விமான நிலையம் செல்லும் பல தமிழ் இளைஞர்கள் இவ்வாறு இரகசியமாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தூதுவர் தமிழ் இளைஞர்கள் தாமாகவே தமக்குச் சூடு வைத்துவிட்டு, மற்றும் காயங்களை ஏற்படுத்திவிட்டும் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக பொய்யுரைப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும் சித்திரவதைகளுக்கு உள்ளானதாகக் கருதப்படும் ஒரு தமிழ் இளைஞரை ஸ்கை செய்திச் சேவை தகுந்த மருத்துவர் ஒருவரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. அவர் மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில், இக் காயங்கள் ஒருவரால் தமக்குத் தாமே வைத்துக்கொள்ள முடியாது என்றும், அது பிறர் ஒருவராலேயே செய்யப்பட்ட காயம் எனவும் கூறியுள்ளார். அதுவும் சித்திரவதைகள் பல செய்யக்கூடிய அனுபவம் வாய்ந்த ஒருவரால் மட்டுமே இக் காயங்களை ஏற்படுத்த முடியும் என அம்மருத்துவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக ஸ்கை செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment