கருணாவுக்கும் வெளிநாட்டிற்கு ஆட்கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு !
கிழக்கு மாகாண இளைஞர் அணியொன்றை கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து, சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று தோஹா, கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாக்கிய சம்பவத்துடன் கருணாவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் தொடர்புபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான வசந்தன் என்பவரையும் அவரது மனைவி கீதா என்பவரையும் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புச் செயலாளரின் தலையீட்டினால் இது தடுக்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.மட்டக்களப்பில் வசித்துவந்த 35 பேரை கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒருவரிடம் தலா 10 லட்சம் ரூபாவைப் பெற்றுள்ளனர். இதனை கருணாவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியும், அவரது மனைவியும் மேற்கொண்டுள்ளமைக்கான போதிய சாட்சிகள் பொலிஸாரிம் சிக்கியுள்ளதாம். எனினும், இவர்களைக் கைதுசெய்ய வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் தலையீடு செய்துள்ளதால் விசாரணைகளை நடத்திவந்த பொலிஸார் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. என்ன செய்யமுடியும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே !
No comments:
Post a Comment