Translate

Tuesday 21 February 2012

உலகத் தாய் மொழி தினம்

இன்று உலகத் தாய்மொழி தினம். அனைவருக்கும் தாய் மொழி தின வாழ்த்துக்கள் .


 உலகில் உள்ள அனைவரும் தங்கள் தாய் மொழியை பேணி பாதுகாக்க வேண்டும் . எந்த சூழ்நிலையிலும் தங்கள் தாய் மொழியை விட்டுக் கொடுக்கக் கூடாது . பல நாடுகள் மற்றும் இனங்களின் படையெடுப்பாலும் , உலகமயமாக்கலின் தாக்கத்தாலும் இன்று பல மொழிகள் அழிந்து கொண்டு வருகிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கும் இன்று கடும் பாதிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
தாய் மொழிக் கல்வியை இழந்த நகரத்து தமிழர்கள் இன்று இரண்டாம் பாடமாக கூட தமிழ் மொழியை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஹிந்தி மொழியின் திணிப்பால் அந்தமான் தீவில் உள்ள பழங்குடி மக்களின் மொழி முற்றிலும் அழிந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியின் திணிப்பால் தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல தமிழ் மொழி பாதிப்பு அடைந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. தமிழ் ஈழத்தில் சிறப்பாக ஓங்கி வளர்ந்த தமிழ் மொழியும் இன்று சிங்கள அரசின் ஆக்கிரமிப்பால், சிங்கள மொழி தமிழர் நிலப்பரப்பில் திணிக்கப்படுவதால் கடும் பாதிப்படைந்துள்ளது. இது போல் பல தொன்மைய மொழிகள் அழிந்து விட்டது. தமிழ் மொழிக்கும் இத்தகைய சவால்கள் சூழ்ந்து இருப்பதால் , தமிழர்கள் மொழி உணர்வுடன் , தாயின் பால் கொண்ட பற்றினை வெளிப்படுத்துவது போல் தமிழ் மொழியின் மேலும் பற்றுதல் கொண்டு நமக்கு விடப்படும் சவால்களை முறியடித்து தமிழ் மொழியை சிறப்பாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என தமிழர் பாண்பாட்டு நடுவம் தமிழ் மக்களை கேட்டுக் கொள்கின்றது.

No comments:

Post a Comment