Translate

Tuesday, 21 February 2012

கனடாவின் சிறந்த குடியேற்றவாசிகளுள் இலங்கைத் தமிழ்ப் பெண்ணும் தெரிவு


கனடாவின் சிறந்த குடியேற்றவாசிகளாக 75 பேரை ““Canadian Immigrants“ “ சஞ்சிகையானது தெரிவு செய்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட குடியேற்றவாசிகள் 75 பேரில் தமிழ்ப் பெண்ணான மெலனி டேவிட் என்பவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் சிறந்த குடியேற்றவாசி என்ற சிறப்பைப்பெற்ற முதல்பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மெலனி டேவிட் கனடாவில் குடியேறி, சட்டப் படிப்பை முடித்து சட்ட வல்லுனராகி கனடாவில் லோ ஒஃபிஸ் எனும் சட்ட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அத்துடன் இவர் வேறு பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி தமிழர்களுக்கும் வேறு இனத்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றார். இவருக்கு கிடைத்த இந்த சிறப்பு புலம்பெயர் தமிழ்ப் பெண்களுக்கு ஒரு உந்து கோலாக அமைவதுடன் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்ப் பெண்கள் இலைமறை காயாக செய்துவரும் சாதனைகளை உலகறியச் செய்யவும் இன்னும் பல மைல் கற்களை கடக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட இந்த 75 குடியேற்ற வாசிகளில் 25 பேர் வெற்றியாளர்களாக வாக்குப் பதிவு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெலனி டேவிட் என்பவருடன் கனடாவில் குடியேறி வாழும் சேவியர் பெர்னாண்டோ எனும் தமிழ் பொறியியலாளரும் 75 பேரில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment