நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சிவிலியன்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கிற்கு மட்டும் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெல்ரன் ரணராஜா மீதான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
ஷெல்ரன் ரணராஜா போன்றவர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக நியமித்திருந்தால் வடக்கு கிழக்கு பாரிய வளர்ச்சியடைந்து, சமாதான சூழல் எப்போதோ தோன்றியிருக்கும் என அதன்போது அவர் குறிப்பிட்டார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஷெல்ரன் ரணராஜா தமிழ் மக்கள் மீது கௌரவமும் நட்புறவும் கொண்டவர். எதிரானவரே கிடையாது. சிங்களத் தீவிரவாதம் உச்சம் பெற்றிருந்த கால கட்டத்தில் அரசியல்வாதிகள் எல்லாம் கட்டில்களுக்கு கீழே ஒளிந்திருந்த வேளையில் ஷெல்ரன் ரணராஜா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீதியில் தனியாக சென்று வருவார்.
அந்தளவுக்கு தீவிரவாதிகள் கூட அவரை மதித்தனர். இன்று நாட்டில் ஏனைய மாகாணங்களுக்கு ஆளுநர்களாக சிவிலியன்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாகவே உள்ளனர். ஆனால் தமிழர் பிரதேசங்களான வடக்கு, கிழக்கில் இராணுவத்தை சார்ந்தோரே ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
எமது துரதிர்ஷ்டம் ஷெல்ரன் ரணராஜாவால் வடக்கு, கிழக்கு ஆளுநராக வரமுடியவில்லை. அவர் வந்திருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பாரிய அபிவிருத்தியைக் கண்டிருக்கும். சமாதான சூழல் எப்போதோ தோன்றியிருக்கும். என அவர் உரையாற்றினார்.
|
No comments:
Post a Comment