Translate

Friday 30 March 2012

இலங்கையில் சிங்களவர் என்ற இனம் இருக்கவில்லை

இலங்கையில் சிங்களவர் என்ற இனம் இருக்கவில்லை எனவும் இலங்கைக்கு விஜயன் வரும் போது, இயக்கர், நாகர் என்ற இரண்டு இனங்களே இருந்தன எனவும் இந்த இனங்களுடன், விஜயனுடன் வந்தவர்கள் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதால், சிங்களவர் என்ற இனம் தோன்றியதாகவும் இல்லையொன்றால், இலங்கையில் சிங்கள இனம் என்ற ஒரு இனம் இருந்திருக்காது எனவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளாhர்.


குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்வார்களா என சிலர் கேட்கின்றனர்.  மின்சார நாற்காலி தற்போது, உலகில் எங்கும் இல்லை.  இதனால் நாட்டுக்கு அனர்த்தம் ஒன்று இருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும்.  மகிந்த செய்யும் தவறுகளுக்காக நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், நாட்டுக்கு அது பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் காரணமாகதான், மக்கள் இணைந்து, முன்னர், மகிந்த, ரணிலின் அரசாங்கத்தை தூக்கியெறிந்தது போல், இந்த அரசாங்கத்தையும் தூக்கியெறிய வேண்டும்.

அரசாங்கத்தை தூக்கியெறியாமல், தப்பிக்க முடியாது. அவ்வாறின்றி, தப்பிக்க வழியிருந்தால் எவராவது கூறுங்கள். இந்த அரசாங்கம் ஆட்சியில் இருப்பது, நாட்டிற்கு பாராதூரமான நிலைமையை ஏற்படுத்தும்.  ஒரு காலத்தில் நாட்டில் பிரிவினைவாதம் செயற்பட்டது. 40 ஆண்டுகளில் 50க்கு 50 கோரி, ஹர்த்தால், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னர், பண்டாநாயக்க, செல்வநாயகத்துடன் உட்ன்படிக்கை ஒன்றை செய்தார்.  டட்லி சேனாநாயக்க, செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்தார்.  ஸ்ரீ  எழுத்தின் மீது தார் பூசினர்.  அவ்வறான எதிர்ப்புகள் இருந்த காலம் இருந்தது.  தமிழ் இனவாதிகளும், சிங்கள இனவாதிகளும் சண்டையிட்டு கொண்டனர்.  அந்த காலத்தில், 70 ஆம் ஆண்டு வாக்கில், ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

30 வருடகாலம் நாட்டில் ஆயுத போராட்டம் நடைபெற்றது.  தற்போது, நாட்டில் இவை இரண்டுமே இல்லை.  ஆயுதப் போராட்டமும் இல்லை, முன்னர் மேற்கொண்ட தேசிய ரீதியான போராட்டமும் இல்லை. இதனால் போராட்டத்தின் உண்மையான உரிமையாளர்கள் தற்போது, போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  தற்போது, நாட்டில் இந்த போராட்டம் நடைபெறவில்லை. நாட்டுக்கு வெளியில் போராட்டம் நடைபெறுகிறது.  அது கெடுதியான நிலைமைக்கு சென்றுள்ளது.  இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.  இது நாட்டிற்குள் பிரபாகரன் நடத்திய தாக்குதலை விட மிகவும் பயங்கரமானது.  அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என தற்போது கூறுகின்றனர். இதற்கு முதல், பிரச்சினை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தேசியப்பிரச்சினை என்ன என்பதை அறியாது எப்படி அதனை தீர்ப்பது எனவும் லால் காந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment