Translate

Monday 12 March 2012

தமிழீழ மக்களின் மன வலிமையை சிதரடிக்க சிங்களத்தின் உச்ச சதி.ஆங்கில ஊடகமூடாக நிறைவேற்றப்படவிருக்கிறது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுலபமாக முடிவுரை கட்டிவிடலாம் என்று பகல் கனவு கண்ட சிங்கள நரிகள் கூட்டம் முள்ளிவாய்க்காலின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிக்க முடியாத தமிழீழ நடி நாட்டை மீட்பதற்க்கான அரசியல் தாக்குதல்களை புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வீச்சுடன் முன்னெடுத்து வரும் நிலையில்

அவர்களின் மன உறுதியை நிர்மூலமாக்கும் விதமாக சிங்களம் புதிய வழிமுறை ஒன்றை கையாள முயன்றுள்ளதாக ஈழதேசம் இணையத்தின் புலனாய்வு அணியினருக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாகவே தகவல் கிடைத்துள்ளது.இது தொடர்பாக அனைத்துலக தமிழர்களும் எச்சரிக்கையுடனும் தெளிவுடனும் இருக்குமாறும் ஈழதேசம் இணையம் கடந்த 03.03.2012 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததோடு அது தொடர்பான மேலதிக செய்திகளையும் உறுதிப்படுத்துவதற்கு ஈழதேசம் புலனாய்வு செய்திப்பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக ஆயுதங்களை மெளனித்ததன் பிற்பாடு தமிழீழம் மீட்பதற்க்கான போராட்டங்கள் தேக்கநிலையை அடைந்துவிடும்,அது வெறும் கனவாகவே போய்விடும் என்று பகல் கனவு கண்டு மகிழ்ச்சியில் இருந்த சிங்கள நரிகள் கூட்டத்திற்கு புலம்பெயர் மக்களின் அரசியல் வழியிலான போராட்டங்கள் பெரும் தலைவலியை கொடுத்ததோடு,சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தால் இறுதி யுத்தத்தின் போது நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பாகவும் அதற்காக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கூறியும்,கடந்த பல பத்து ஆண்டுகளாக சிங்கள அரசாங்கத்தால் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றமை ஒரு இன சுத்திகரிப்பு(இன அழிப்பு)நடவடிக்கையே என்றும் அதன் உச்சமே 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் என்று சிங்கள இனவாத அரசால் கூறப்படும் யுத்தத்தின் இறுதி நாட்களில் மட்டும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரச படைகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்களில் பலியெடுக்கப்பட்டிருந்தமையை ஜ.நா நிபுணர் குழுவினராலேயே உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்து.

இந்த நிலையில் இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே என்று சர்வதேச மட்டத்தில் உள்ள பல மனித உரிமை அமைப்புக்களும்,தொண்டு நிறுவனங்களும் திட்டவட்டமாக வெளிப்படையாகவே கூற முனைந்துள்ள நிலையில் தமிழர்களின் அரசியல் வழியிலான போராட்டங்களும் அவர்களால் சிறீலங்கா அரசை ஒரு "இன அழிப்பு" செய்த நாடென்று உலக நாடுகளின் மத்தியில் தோளுரித்து காட்டுவதற்காக பல சர்வதேச நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே உலகப்பரப்பில் சிங்கள இனவாத அரசிற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவற்றை நசுக்கும் விதமாகவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் மன உறுதியை தகர்த்தெறியும் நோக்குடனும் பல சதி திட்டங்களை சிங்கள அரசு வெற்றிகரமாகவே முன்னெடுத்து வருகின்றது.

எங்கு அடித்தால் தமிழர்களின் மன உறுதியை உடைக்கலாம் என்று திட்டமிட்ட சிங்கள புலனாய்வுத்துறையினர் அதிலேயே மீண்டும் கைவைத்துள்ளனர்.

தலைவர் அவர்கள் கொல்லப்பட்டதாக பல புகைப்படங்களையும் காணொளிகளையும் வடிவமைத்து திரையிட்டு எடுபடாமல் தமிழ் மக்களாலும்,தொழில்நுட்ப வல்லுணர்களாலும் அவை பொய் என நிறூபிக்கப்பட்டதன் பிற்பாடு சில தமிழ் இன தேசத்துரோகிகளை வைத்தும் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் சிங்கள அரசால் காட்டப்பட்ட புகைப்படம் உண்மையே என்றும் கூறப்பட்ட போதும் அவற்றையும் உலகத்தமிழர்கள் புறக்கணித்திருந்ததோடு,அவ்வாறு தலைவர் கொல்லப்பட்டதாக கூறிய சில தமிழ் தேச துரோகிகள் தற்போது யாருடன் உள்ளார்கள்,யாரை காப்பாற்றுவதற்காக எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதை கே.பி என்ற பத்மநாதனை வைத்தே நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

இலங்கையில் உள்ள ஊடகங்கள் முக்கியமாக ஆங்கில ஊடகங்கள்,இந்தியாவிலிருந்து(சிங்கள அரசு போடும் எலும்புத்துண்டுக்காக எழுதிவரும்)வெளிவரும் ஊடகங்களிலும்,அறிவு ஜீவிகள் என்று கூறித்திரிபவர்களை வைத்தும் இன்னும் பல வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு தோற்றுப்போன சிங்கள புலனாய்வு துறையினர் தமிழர்களால் நம்பப்படும்,தமிழர்களால் நன்றியுடன் பார்க்கப்படும் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றை வைத்து நிறைவேற்றுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளது,அல்லது அது அதில் வெற்றி பெற்றுள்ளதென்றே கூற முடியும்.

தலைவர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக  ஒரு பொய்யான செய்தியை சனல்4 ஊடாக சிங்கள நரிகள் கூட்டம் வெளியிடவுள்ளதென்பதை ஈழதேசம் இணையம் அறிந்து கடந்த இரண்டு வாரங்களாகவே பேர் அதிர்ச்சியில் உள்ளோம்.ஆனால் இந்த காணொளி அல்லது புகைப்படத்தை சில தமிழர்களே சனல்4 தொலைக்காட்ச்சிக்கு வழங்கியுள்ளதாக ஈழதேசத்தின் புலனாய்வாளர்களுக்கு தெரியவந்துள்ளது.

எனவே சிங்கள புலனாய்வாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.சில ஊடகங்கள் தம்மை நடுநிலமையாளர்கள் என்று காண்பிற்பதற்காகவும் இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றமை கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.அதே போன்றே தொடர்ந்தும் சிங்கள அரசை நீதியின் கூண்டில் நிறுத்தும் தரத்துடனான காணொளிகளை வெளியிட்டு வரும் சனல்4 தொலைக்காட்சி மீது புலிகளின் சாயம் இலங்கை அரசால் பூசப்பட்டுள்ள நிலையில் தன்னை ஒரு நடுநிலமையான ஊடகமாக காண்பிற்பதற்காக அந்த ஊடகம் இவ்வாறானதொரு செய்தியை வெளியிட உள்ளதா என்ற அச்சமும் எமக்கு உள்ளது.

இதேவேளை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக சனல்4 வெளியிட உள்ளதாக எம்மால் அறியப்பட்ட காணொளியை இலங்கை அரசே கசிய விட்டுள்ளது.அதே காணொளியை சில தமிழ் இணையங்கள் மூலம் முன்பே வெளியிடுவதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் எண்ணியிருந்த போதும் ஒரு சர்வதேச ஊடகமூடாக அவை வெளியிடப்பட்டால் தமிழ் மக்களை நம்பவைத்துவிடலாம் என்றே இலங்கை அரசு மீண்டும் பகல் கனவு காண்கிறதென்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.(சனல்4-ஆல் வெளியிடப்படவுள்ள காணொளி முன்பே சில தமிழ் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்ததென்றும் ஒரு  செய்தி கூறுகிறது)

சனல்4 தொலைக்காட்சியால் தலைவர் தொடர்பாக வெளியிடப்படவுள்ள காட்சியில் தலைவர் கொல்லப்பட்டதாக சனல்4 100% வீதம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படத்தை வைத்தே தாம் அவ்வாறு கருதுவதாக சனல் 4 புதிய வீடியோவில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பான மேலும் பல ஆதாரத்துடனான செய்திகளை ஈழதேசத்தில் எதிர்பாருங்கள்.
இது தொடர்பாக நாம் கடந்த 03.03.2012 அன்று வெளியிட்டிருந்த செய்தி இணைப்பு

No comments:

Post a Comment