பிரபாகரனின் கொலைச் சூத்திரதாரி இந்தியாவே!
பிரபாகரன் படுகொலை செய்யப்பட வேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என முதலில் இந்தியாவே தெரிவித்திருந்ததாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என சில நாடுகள் அறிவித்த பின்னர், இறுதியாகவே இலங்கை அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவித்தது. பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனக் கூறிய நாடுகள், இலங்கையை ஸ்தீரமற்ற நிலைக்கு உள்ளாக முயற்சித்து வருகின்றன.
யுத்தத்தின் பின்னர், இலங்கையில் செழிப்பான மாற்ங்கள் ஏற்பட்டுள்ள காணும் சில வெளிநாடுகள், இலங்கையில் போராட்டம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன. இதனை எதிர்கொள்ள கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment