Translate

Monday 12 March 2012

இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலய மடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்ட சம்பவம்-


இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலய மடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்ட சம்பவம்-

செல்வம் கண்டனம்.
இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலய மடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்ட சம்பவம்-
 வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தில் உள்ள மடு மாதா வின் திருச்சொரூபம் கடந்த சனிக்கிழமை அதிகாலை அகற்றப்பட்ட சம்பவம் இன நல்லுறவை சீர் குழைக்கும் செயல் எனவும் குறித்த செயற்பாட்டை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன தெரிவித்துள்ளார்.

 
-இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,
 
கடந்த சனிக்கிழமை (10.03.2012) காலை சுமார் 5.45 மணிக்கும் 6.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தில் உள்ள மடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்டுள்ளது.
 
கார்மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மடுமாதாவினுடைய திரூச்சொருபத்தை  எடுத்து ஆலயத்தின் மத்திய பகுதியில் நிலத்தில் வைத்து திருச்சொரூபத்தின் மீது நீரை ஊற்றியுள்ளனர். 
 
அதேவேளை கார்மேல் மாதாவின் திருச்சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டினை உடைத்து மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலைகளை கழற்றி வீசியெறிந்திருக்கின்றனர்.
 
அதிகாலையில் தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொரூபத்தினை அகற்றி இவ்வாறு செய்தவர்கள் எவரென இதுவரையில் தெரியவில்லை.
குறித்த சம்பவம் மிகவும் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.இன மத வேறுபாடு எவையும் இன்றி அனைவரும் வழிபடும் அன்னை மடு மாதா.
 
குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குறித்த சம்பவம் இன நல்லுறவை சீர் குலைக்கும் சம்பவமாகவே நான் கருதுகின்றேன்.
 
 
நாட்டின் பல பாகங்களிலும் வீதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் ஆலையத்தினுள் உள்ள மடு மாதாவில் திருச் சொரூபத்திற்கு இப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலமை ஏற்பட்டுள்ளது. 
 
 
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கடும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. -எனவே பாதுகாப்புத்தரப்பினர் குறித்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த செயற்பாட்டில்  ஈடுபட்டவர்களை உடன் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment