இலங்கை விமானப் படையினரால் வன்னியில் இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை நிறுத்துவித்தார் என்கிற பெருமைக்கு உரிமை கோரி உள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி.
கொழும்பில் இருந்த அமெரிக்க தூதுவருக்கும், சங்கரிக்கும் இடையில் 2008 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெற்று இருந்தது.
இச்சந்திப்பிலேயே விமானப் படையினரால் வன்னியில் இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை ஜனாதிபதியின் தலையீட்டின் மூலம் நிறுத்துவித்தார் ஆனந்தசங்கரி பெருமிதத்துடன் கூறி இருக்கின்றார்.
இரவு நேரங்களில் விமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமையால் பொதுமக்கள் எதிர்கொள்ள நேர்கின்ற அவலங்களை விளக்கி ஜனாதிபதிக்கு ஏப்ரல் 17 ஆம் திகதி கடிதம் அனுப்பி இருந்தார் என்றும் இதைத் தொடர்ந்து இரவு நேர தாக்குதல்களை நிறுத்த ஜனாதிபதி உத்தரவிட்டார் என்றும் ஆனந்தசங்கரி சொல்லி இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து சந்திப்புக்கு மறுநாள் தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.
No comments:
Post a Comment