ஜெனிவாவில் தொடர்ச்சியான பரப்புரையில் BTF !
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மாநாட்டில், தொடர்ச்சியாக கடும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றது பிரித்தானிய தமிழர் பேரவை(BTF). கடும் அழுத்தம், அச்சுறுத்தலுக்கு மத்தியில் கூட அதன் செயல்பாட்டாளர்கள் ஜெனீவாவில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பன்நாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கி வருகின்றனர். இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே இணைத்துள்ளோம் !
ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனித உரிமை பரப்புரை - பிரித்தானிய தமிழர் பேரவை
பெப்ரவரி 27 ஆம் திகதியில் இருந்து ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றிக்கொண்டிருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளை அணுகி தொடர்ச்சியாக பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒழுங்கமைப்பில் கனேடிய தமிழர் காங்கிரஸ் (Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல்செயலவை (United States Tamil Political Action Council) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்றும் நாடுகளின் இராஜதந்திரிகளையும், நாடுகளின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளும் இவ் அணியினர் குறிப்பாக அமெரிக்காவில் பரக் ஒபமா தேர்தலில் வெல்லுவதற்காக கடுமையாக உழைத்தவரும், அமெரிக்காவின் போது உரிமைகள் காப்பாளருமான ஜெசி ஜக்ஸன் அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை அணியினர் சந்தித்துள்ளனர்.
28 மார்ச் 2009 இல் லண்டனில் நடந்த புலம்பெயர் தமிழ் மக்களின் மகாநாட்டில் "இலங்கையில் படுகொலைகளை நிறுத்துவது சர்வதேசத்தின் கடைமைஎனவும், இலங்கை சர்வதேச சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், சுயநிர்ணைய உரிமைகள் உட்பட பொருளாதார நீதி கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் இலங்கை அரசு தாம் செய்த போர் குற்றங்களை மூடிமறைப்பதற்கு இலங்கையின் பல இராஜதந்திரிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நின்று பரப்புரை செய்துகொண்டு நின்றதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தமிழர் பேரவை.
No comments:
Post a Comment