Translate

Monday, 16 April 2012

மெனிக்பாம் மக்களை சந்திக்க அனுமதியளிக்கப்பட வேண்டும்

இந்திய எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் இடம்பெறும் புனரமைப்புப் பணி கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கைக்கு வந்துள்ள நிலையில், அவர்களிடம் நேற்று மத்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கிக் கூறினார்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்­, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க ஆகியோரை சந்தித்து பேசுவது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியுடன் விருந்துபசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் இதன் போது கூறப்பட்டது. இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித் துள்ளனர். இக்குழுவில் இருந்து அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியுடனான விருந்துபசார நிகழ்ச்சியை மாற்ற வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.

ஜனாதிபதியுடன் எதிர்வரும் 21ஆம் திகதி காலை சாப்பிடுவதற்குப் பதிலாக 20ஆம் திகதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யு மாறு அவர்கள் கோரியுள்ளனர். அத்துடன் புகையிரத திட்டப்பணிகளை பார்வையிடும் நிகழ்ச்சியை ரத்துச் செய்து விட்டு மெனிக்பாம் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment