Translate

Monday, 30 April 2012

பிரித்தானியா நாடுகடத்திய நபர் இலங்கையில் வைத்து படுகொலை !

சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 28 வயது தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்நெட் செய்திவெளியிட்டுள்ளது. கடந்த 18ம் திகதி இவர் திருகோணமலையில் வைத்து கொல்லப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது.
சமீபத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் தலைவெட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தியை நாம் பிரசுரித்திருந்தது நினைவிருக்கலாம். இச் சம்பவத்தை அடுத்து, இலங்கை அதிரடிப்படையினர் திருகோணமலையில் பாரிய இரகசிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தனர். இதன்போது சுமார் 300 பேர் கைதுசெய்யப்பட்டு இரகசியமாக அவர்கள் அனைவரையும் வெலிகந்தை முகாமுக்கு கொண்டுசென்றது அதிரடிப்படை.

இச் சம்பவத்தோடு, இக்கொலையும் தொடர்புற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. குறிப்பிட்ட 28 வயது இளைஞர் சம்பவ தினம் அன்று வெளியேசென்று வீடு திரும்பிய நிலையில், தன்னைச் சிலர் பின் தொடர்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் திரும்பவும் வெளியேசென்றவேளை அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்று தெரிந்தும், பிரித்தானிய அரசு தொடர்ந்தும் தமிழர்களை நாடுகடத்திவருகின்றமை கண்டிக்கத்தக்க விடையமாகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2417

No comments:

Post a Comment