Translate

Wednesday 25 April 2012


இதுவரை ஒரு இலட்சம் பெண்களுக்கு பிரித்தானியாவில் பிறப்புறுப்பு சிதைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த சட்டவிரோதமான முறையில் பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைப்பு பத்து வயதிலேயே செய்யப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

குறித்த செயற்பாடுகளில் மருத்துவர் அல்லது பல் மருத்துவர் அல்லது முறையான பயிற்சி எடுக்காத மருத்துவப் பயிற்சியாளர் கூட ஈடுபடுகின்றார்களாம்.

ஒரு சில கலாசாரக் காரணங்களுக்காக இந்த நடைமுறை ஆபிரிக்கா முழுவதும் பரவியுள்ளது.

இப்படியான பிறப்பிறுப்புச் சிதைப்பில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்தானியாவில் 14 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.

இந்த கொடுமையான ஆபத்தை பிரித்தானியாவில் வருடாந்தம் 22000 பெண்கள் எதிர் நோக்குவதாகத் தெரிய வந்துள்ளது.

குழந்தையாக இருக்கும் போதே பிறப்பிறுப்பு சிதைப்பால் பாதிக்கப்பட்ட Waris Dirie என்ற இந்தப் பெண் தற்போது சுப்பர் மொடலாக உள்ளார்.

குறித்த பெண் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக வருகின்ற பொலிஸ் கறுப்பினப் பெண் பாதிக்கப்பட்டால் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. இதனைத் தான் இனவாதம் என்கிறோம்.

No comments:

Post a Comment