மூன்றாம்தரப்பு நடுநிலை தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இனப்பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறிலங்கா அரசு கடந்த காலங்களில் பேச்சுக்களில் ஈடுபடவில்லை.
“இனப்பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறிலங்கா அரசு கடந்த காலங்களில் பேச்சுக்களில் ஈடுபடவில்லை.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் நடத்திய பேச்சுக்கள் வெறுமனே காலத்தைக் கடத்தும் நோக்கத்தையே கொண்டிருந்தன.கடந்த ஓரு ஆண்டாக சிறிலங்கா அரசுடன் நாம் நடத்திய பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அனைத்துலக தலையீடு இருந்தால் மட்டுமே, பேச்சுக்கள் தீர்வுத்திட்டம் நோக்கிச் செல்லும் என்று நம்புகிறோம்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment