வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்ண, காந்தி வழியில் அறப்போராட்டம் நடாத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம் திமுகவின் துணை இணக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும்.
தந்தை செல்வாவின் வழியில் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும். இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.
ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்சியம். தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment