Translate

Wednesday 25 April 2012

யாழ்ப்பாணத்தில் உணர்வு கரைந்து போய் விடுமென யாரும் நினைத்தால் அது சொல்கின்றவரின் பலவீனத்தின் வெளிப்பாடு. கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன


போருக்குப் பின்னரும் இந்த அரசு தமிழ் மக்களை பெரும் படை பலத்துடன் அடக்கி வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய கட்டாய தேவையாகும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பிரச்சினையை பொறுத்த வரை தமிழ் மக்களினது சுயநிர்ணய உ ரிமை அவர்களின் தாயகம் ஆகியவற்றை பொறுத்த வரை நவசம சமாஜக் கட்சி அவற்றை அங்கீகரிப்பதுடன் அதற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பேராடியும் வருகின்றது.
இதே நேரம் இன்றைய கால கட்டத்தில் போருக்கு பின்னரான காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களை பெரியளவில் படைபலத்துடன் ஒடுக்கி வருகின்றது. எனவே இத்தகைய கொடிய ஒடுக்கு முறை செயற்பாட்டுக்கு எதிராக அனைத்து எதிர் சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
போராட்டங்களின் ஊடாகவே இந்த ஆட்சியை பலவீனப்படுத்த முடியும். அதனையே நவசம சமாஜக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில்
உணர்வு கரைந்து போய் விடுமென யாரும் நினைத்தால் அது சொல்கின்றவரின் பலவீனத்தின் வெளிப்பாடு என்றே அடையாளம் காண முடியும்.
நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த யாரும் அருகில் நெருங்க முடியாது இன்றைய கால கட்டத்தில் போராட்ட வடிவங்கள் ஊடாகவே தமிழ் மக்களின் விடுதலைப் பேராட்டத்தை முன்கொண்டு சொல்ல முடியும்  .

No comments:

Post a Comment