சிறிலங்காவில் இருந்து நாடு திரும்பிய இந்தியக்குழு திக்குமுக்காடி நிற்கின்றது. காரணம் சிறிலங்கா அரசாங்கத்தின் வழமையான சாக்கடை இராஜதந்திரம்தான். கொழும்பில் இருந்து வெளிக்கிடமுன்னரே தாம் என்னென்ன பேசினோம் இந்தியக்குழு கூறிக்கொண்டே போனது. இறுதியில் இந்தியா சென்ற பின்னரும் பட்டியலிட்டு என்னென்ன மஹிந்தருடன் பேசினோம் என அறிக்கைவிட்டார்கள் ஆனால் அறிக்கை எழுதிய பேனா மை காயமுன்னரே மஹிந்த அரசாங்கம் மறுப்பு அறிக்கையினை விடத் தொடங்கிவிட்டது. இதனால் திக்கற்று, நாதியற்று இருக்கின்றது இந்திய நாடாளுமன்றக்குழு.
இதனால் நிலை தடுமாறிப்போயுள்ள இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர் சுதர்சனன் நாச்சியப்பன் இன்று பிபிசியிடம் கூறும் போது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பாணியில் இதெல்லாம் அரசியல்ல சகஜம் அப்பா என கூறி, தமது நடவடிக்கைகள் எல்லாம் இராஜதந்திர நகர்வு என்றும் என்னதான் நடக்கும் என பொறுத்திருந்து பாருங்களேன் எனவும் பூடகமாக பேசினார்.
இந்தியக்குழுவிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்திருக்கும் தமது தலைவர் இராஜிவ் காந்தியை கொழும்பிற்கு அழைத்து பிடரியில் அடிபோட்டு அனுப்பியவர்கள்தான் இந்த சிங்களவர்கள். ஆகவே தலைவருக்கு அந்த மரியாதை என்றால் சாதாரண உறுப்பினர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.
அதுதொடர்பாக இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், தங்களது இலங்கைப் பயணத்தின்போது, வடக்கில் ராணுவப் பிரசன்னத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியிடம் பேசியதாகத் தெரிவித்தார். பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ராணுவத்தினர் அழையா விருந்தாளிகளாக வருவதாகவும், கோயில்களுக்குள் நுழைவதாகவும் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்..
ஆனால் சிறிலங்காவோ இதுவுமே அப்படி பேசவில்லை என்பது போல கூறிவருகின்றது. ஆகவே இன்னும் சில நாட்களில் சிறிலங்காவிற்கு வந்த இந்தியக்குழுவினர் ஒன்றுமே தம்மிடம் பேசவில்லை என மஹிந்த அரசு விரைவில் அறிக்கை விட்டாலும் அது அதிசயம் இல்லை.

No comments:
Post a Comment