Translate

Wednesday 25 April 2012

“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..:29.04.2012. ஞாயிறு


“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..:29.04.2012. ஞாயிறு

40 வருட வரலாற்றைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. நேர்மறையானவற்றை உள்வாங்கிக்கொள்ளலும் எதிர்மறையானவற்றை விமர்சித்தலும் மக்களின் தொடரும் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும். முள்ளிவாய்க்காலில் பேரினவாத அரசு உலக அதிகாரங்களின் அனுசரணையோடு திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னர் நான்கு தசாப்தங்களின் முன்னர் எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறோம் என்ற விமர்சனத்தை தான் குறித்த சுய விமர்சனத்தோடு நூலுருவில் உருவாக்கியிருக்கிறார் கணேசன்(ஐயர்).

ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை « வரலாறு » என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”
விமர்சன ….கருத்தாடல்
இசிதோர் பெர்ணான்டோ
சஷீவன்
வாசுதேவன்
சத்தியசீலன்
அசோக் யோகன்
மற்றும்
சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…
) தலைவர் ; தமிழ் மாணவர் பேரவை (
காலம்: 29.04.2012. ஞாயிறு.
பிற்பகல் 2. 30 மணி தொடக்கம் 8.00மணி
இடம்: SALLE POLONCEAU
25 , RUE POLONCEAU
75018 PARIS.
மெற்றோ: LA CHAPELLE
பாதை: place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
அசை – சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் – பிரான்ஸ்
06 19 45 02 76
asai.marx@gmail.com

No comments:

Post a Comment