Translate

Wednesday 25 April 2012

திருமலை ஆலய இடிப்பு சம்பந்தன் தலையீட்டால் தடுக்கப்படும் - துரைரட்ணசிங்கம்

திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் சட்டவிரோத கட்டட அமைப்புகளை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. 


குறித்த ஆலயத்தின் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்டோர் அவ்விடத்திற்குச் சென்று ஆராய்ந்துள்ளனர். 

வைத்தியசாலையில் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோயில் கட்டடத்தின் கூரை சற்று வைத்தியசாலையின் பக்கம் நீண்டுள்ளதாக துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். 

இப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் அரச உயர்மட்டத்தினருடன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளதாக சம்பந்தன் கூறியுள்ளாரென அவர் குறிப்பிட்டார். 

இந்த ஆலய இடிப்பு விடயம் பெரும்பாலும் கைவிடப்படும் என துரைரத்னசிங்கம் நம்பிக்கை வெளியிட்டார். 

No comments:

Post a Comment