Translate

Wednesday, 25 April 2012

பெரும்பான்மை இனரின் மிலேச்சத்தனமான செயலை…


மத வழிபாட்டுத்தலம் பெரும்பான்மை இனரால் தாக்கப்படவதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழும் தம்புள்ள பிரதேசத்தில், தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை சமூகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத வழிபாட்டுத் தளமம் சேதப்படுத்தப்பட்டுள்ளதுஇ இவர்களுடைய இவ்வாறான செயற்பாடுகள் மனித நேயம் கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மிலேச்சத்தனமான செயலை தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு ஒரு வரலாற்று பதிவாகும்.
அன்றைய கால கட்டத்தில் பெரும்பான்மையின சில சிங்கள மன்னர்களை கூட அரக்கர்களிடமிருந்து பாதுகாக்க தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள் தான் முஸ்லிம்கள்.
அவ்வாறான முறையில் பெரும்பான்மையினருடன் நெருக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, சுதந்திரமாக மதக் கடமைகளை செய்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதானது, நாட்டின் ஆரோக்கியமான செயற்பாட்டிற்கு வழிவகுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இலங்கை சுதந்திரம் அடைந்த நாடு அதனால் இந்த நாட்டில் பிளவுகள் ஏற்படக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்துடனேயே முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அதற்காக அவர்கள் பல தியாகங்களை செய்துள்ளதையும் நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment