Translate

Monday, 30 April 2012

நாம் விரிவாக விவாதிக்க முடியும்.

அந்த விவாதத்திற்கூடாக அந்த மேடை அளிக்கையை இன்னும் மேலான தளத்திற்கு எடுத்துச் செல்லலாமென நம்புகின்றேன். அது ஒரு புறமிருக்க ஏறத்தாள 350 வரையிலான இளையவர்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் இவ்வாறான நிகழ்வொன்றிலே பங்குபற்றியிருந்தமை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. இது பற்றிச் சில நண்பர்களோடு பேசியுமிருந்தேன். அவர்கள் பல்வேறு அபிப்பிராயங்களைச் சொல்லியிருந்தார்கள். எம்மைப் போன்று தங்களது வாழ்நிலத்திலிருந்து வெளியேறிய ஆர்மீனியர்கள், குர்தியர்கள், பாலஸ்தீனர்கள், யுாதர்கள் போன்ற அனைவரினதும் இளம் சந்ததியினர் தாயக சுதந்திரம் குறித்து இவ்வாறான மனோநிலையுடன்தான் செயற்பட்டிருப்பார்கள் . 

ஆனால் //இவ்வாறான செயற்பாடுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு கோசம் போட்டு அங்குள்ள மக்களையும் சிக்கலுக்குள் வீழ்த்துகிறீர்கள். ஒன்றுமே தெரியாத இளையவர்கள ஏவி விடுகிறீர்கள்// என்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. அப்பொழுது என்னையே நான் உதாரணத்துக்கு உள்ளாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் மிகச் சிறிய வயதிலே அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டதற்கான காரணம் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருந்த புறச் சூழலே. இந்த அடிப்படையிலேதான் இன்னும் பலர் நுழைந்தார்கள் அரசியலுக்குள்.

வெறும் பாவனைகளை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தில் அரசியல் நீண்டு கொண்டிருக்க முடியாது. தகுதியற்றவர்கள் அந்த அரசியலுக்குள் நுழைந்து கொண்டு செய்யும் சில தகாத செயல்களுக்காக அந்த அரசியலைப் புறந்தள்ள முடியுமா? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. எனவே நாம் இவை பற்றி நிறையப் பேச வேண்டியுள்ளது. உள் வீட்டிற்குள் இல்லாமல் நாம் வெளிப்படையாகப் பொதுவான தளங்களில் இது குறித்துப் பேச வேண்டியுள்ளது என நம்புகின்றேன்

No comments:

Post a Comment