தமிழ் மக்கள் அடக்கப்பட்ட மக்கள் போல் நடாத்தப்படுகின்றனர். அவசரகாலபாதுகாப்புச் சட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.
பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில்கூட ராஜபக்ச விமர்சனத்துக்குஉள்ளாக்கப்படுகின்றார். இவ்வாறுஅவுஸ்ரேலியாவை தளமாகக்கொண்டSydney Morning Herald ஊடகத்தின் Asia-Pacific editor, Hamish McDonald எழுதியுள்ளகட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன்விபரமாவது,
"சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராகதொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அநீதியும், பாரபட்சமும் சிறிலங்காவில்யுத்தம் உருவாகக் காரணமாக அமைந்தது..... சிறிலங்காவினதோ அல்லது வேறுநாடுகளினதோ சமூகங்கள் அநீதிக்கு ஆளாகும் போது மறைமுகமாக அவற்றின்விளைவாக வன்முறை சார் அமைப்புக்கள் உருவாகுவதற்கு தூண்டுதலாகவும்காரணமாகவும் அமைந்து விடும்" எனவும் கார்த்திகேயன் தனது மின்னஞ்சலில்குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்காவில் 25 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் தொடர்பாககற்றறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கானநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாது சிறிலங்கா அதிபர்மகிந்த ராஜபக்ச அசட்டை செய்து வருகின்றார்.
சிறிலங்காவில் தொடர்ந்தும் சட்ட ஆட்சி புறக்கணிக்கப்பட்டு, மிகப் பெரியஇராணுவ இயந்திரம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்த மீறல்கள் விசாரணைசெய்யப்படாது நிலுவையில் காணப்படுகின்றது. தமிழ் மக்கள் அடக்கப்பட்ட மக்கள்போல் நடாத்தப்படுகின்றனர். அவசரகால பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்ந்தும்நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் கூடராஜபக்ச விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்.
இவ்வாறான காரணங்களுக்காகவே, தற்போது நடந்து முடிந்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியாவானது வழமைக்கு மாறான நகர்வைஎடுத்திருந்தது. அதாவது சிறிலங்காவானது தனது சொந்த ஆணைக்குழுவால்முன்வைக்கப்பட்ட நல்லிணக்க பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்எனக்கோரி பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை மேற்குலக நாடுகள் பலஆதரவளித்த நிலையில் இந்தியாவும் இதனை ஆதரித்து தனது வாக்கைஅளித்திருந்தது.
கொழும்பில் யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான ஐ.நாபணியகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் என பேரவையில் முன்வைக்கப்பட்டதீர்மானத்தில் கோரப்பட்டது. இவ்வாறானதொரு கோரிக்கையை குறைத்துபதிலாக வேறெதையாவது மேற்கொள்வதற்கான முயற்சியில் இந்தியாஇறங்கியிருந்தது.
இருப்பினும், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனது அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பி,பேரவையில் முன்வைக்கப்படவிருந்த தீர்மானத்தை உறுப்பு நாடுகள் எதிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் ஒரு கட்டமாக ஜெனீவாவில் கூடியிருந்த மனித உரிமை ஆர்வலர்களின்செயற்பாடுகளைக் குறுக்கீடு செய்வதற்கான நடவடிக்கையில் சிறிலங்காப்பிரதிநிதிகள் குழு ஈடுபட்டனர். இது அனைத்துலக சமூகத்தின் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டது.
இதேபோன்று ஐ.நாவிற்கான சிறிலங்காப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திரசில்வா நியமிக்கப்பட்ட போது உலக நாடுகளின் அதிருப்தியை சிறிலங்கா அதிபர்ராஜபக்சவின் அரசாங்கம் பெற்றுக் கொண்டது. சிறிலங்காவில் புலிகளுக்கு எதிராகதொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 58 வது படைப்பிரிவின்கட்டளைத் தளபதியாக சவீந்திர சில்வா தலைமையேற்றிருந்தார்.
வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மிகப் பாதுகாப்பாக யுத்த வலயத்தை விட்டுவெளியேறுவதற்கான ஆயத்தங்களை புலிகளின் தலைவர்கள் மேற்கொண்டபோது அதற்கான உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியிருந்தது.ஆனால் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு யுத்த வலயத்தை புலிகளின்தலைவர்கள் கடக்க முற்பட்ட போது அவர்கள் மீது சவீந்திர சில்வாவின் 58வதுபடையணியே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கான கட்டளையை சிறிலங்கா அதிபரின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சர்கோத்தாபய ராஜபக்சவிடமிருந்து சவீந்திர சில்வா பெற்றுக் கொண்டதாகவும்அதன் பின்னரே அவரின் கீழ் செயற்பட்ட இராணுவ வீரர்கள், சரணடைய முன்வந்தபுலிகளின் தலைவர்களைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம்நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தால் எதிர்ப்புகாண்பிக்கப்பட்டது. இதன் விளைவாக சிறிலங்காவின் உள்ளுர் பத்திரிகைகளின்தலையங்கங்களில் 'சிறிலங்கா விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு நாம்ஒருவரையும் அனுமதியோம்', 'வெளிநாட்டு சதிகளை முறியடிப்பதற்குஎல்லோரும் ஒன்று சேர்வோம்', 'இந்தியாவுக்கு சிறிலங்காவில் எந்தவொருபொருளாதார அங்கீகாரமும் வழங்கப்படக் கூடாது', 'அமெரிக்காவின்தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மிக ஆபத்தான ஒன்றாககாணப்படுகின்றது' என கூறப்பட்டிருந்தன.
சிறிலங்கா அரசாங்கத்துக்குச் சார்பான செய்திகளைப் பிரசுரிக்காதபத்திரிகையாளர்களின் கால்கள் உடைக்கப்படும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர்அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழ்ப் புலிகள் எவ்வாறுசிறுவர்களைப் படையில் இணைத்தார்கள் என்பது தொடர்பாகவும், மக்களைமனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை தொடர்பாகவும் புலம் பெயர் தமிழ்மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும், ஆனால் ஜெனீவாவில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் இவ்வாறான புலிகளின் மீறல்கள்தொடர்பாக புலம் பெயர் தமிழ் மக்கள் கூறாது அமைதி காத்தனர் என்பதைசிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிக்காத சிறிலங்கர்கள் பலர் கண்டு கொண்டனர் எனகொழும்பின் சட்ட ஆய்வாளர் ஜெகன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பெரேரா, ராஜபக்சவின் நன்றிகெட்ட தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். "விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, அனைத்துலகசமூகத்திடமிருந்து அரசியல் மற்றும் இராணுவ ரீதியான ஆதரவை சிறிலங்காஅரசாங்கம் பெற்றிருந்தது. இதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் முதன்மை வகித்தஅமெரிக்கா, மற்றும் சிறிலங்காவை எதிர்த்து வாக்களித்த இந்தியா போன்றநாடுகளும் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவுவழங்கியிருந்தன" எனவும் பெரேரா தெரிவித்துள்ளார்.
"யுத்தம் நிறைவுற்ற பின்னர் சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் நிலவும்இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதுவான அரசியல் தீர்வை எட்டும் என்றஎதிர்பார்ப்பிலேயே அனைத்துலக சமூகம் தனது இராணுவ மற்றும் அரசியல்ஆதரவை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது" என பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சிறிலங்காவைப் பூர்விகமாகக் கொண்ட அவுஸ்திரேலியகுடிமகனான பிறேமகுமார் குணரட்னம் என்பவர் புதிய இடதுசாரி அரசியற் கட்சிஒன்றை நிறுவி அதற்கு ஆதரவை வழங்குவதற்காக சிறிலங்காவுக்குச்சென்றிருந்த வேளையில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். இதேபோன்று இக்கட்சியின் பிறிதொரு செயற்பாட்டாளரான டிமுது அற்றிகெலவும் கடத்தப்பட்டுபின் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் பீடத்துடன் தொடர்பு கொண்டு இவ்விருவரினதும்ஆட்கடத்தல்கள் தொடர்பில் தலையீடு செய்ததற்கு அவுஸ்திரேலியஅரசாங்கத்துக்கு நன்றி கூறவேண்டும். இதில் குணரட்னம் உடனடியாகவேசிறிலங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்தக் கடத்தல் சம்பவமானது,சிறிலங்காவில் அண்மைய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 60 வரையானஆட்கடத்தல் சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதற்கு துணைபுரிந்துள்ளது.
அதாவது இவ்வாறான 'வெள்ளை வான்' கடத்தல்கள் தற்போது சிறிலங்காவில்அதிகரித்து வருவதுடன், இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீதுபழிசுமத்தப்படுகின்றது. தன்னைக் கடத்திச் செல்லும் போது தனது இரு கண்களும்இறுகக் கட்டப்பட்டு வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டதாகவும், அவர்கள்காவற்துறை மொழியில் பேசிக் கொண்டதாகவும், தமது மேலதிகாரிகளை 'சேர்'என அழைத்ததாகவும் கடந்த சனியன்று கடத்திச் செல்லப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்ட அற்றிகெல தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மார்ச் 26 அன்று, வர்த்தகரான சகார செனரத்ன வெள்ளை வான்கும்பலால் கடத்தப்பட்டு அவரிடம் 50 மில்லியன் ரூபாக்கள் [370,000 அமெரிக்கடொலர்] கப்பமாக கோரப்பட்டது. ஆனால் இவரது மைத்துனர் ஒருவர் சிறிலங்காஅரசாங்க அமைச்சராக பதவி வகிப்பதால் அவர் உடனடியாக இந்தக் கடத்தல்தொடர்பாக சிறிலங்கா அதிபரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் தொடர்புகொண்டு பேசினார். இதன் பின்னர் அவ் வர்த்தகரைக் கடத்திச் சென்ற வெள்ளைவானின் சாரதி தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றுக் கொண்ட பின்னர்வானிலிருந்தவர்களிடம் 'அவனை விடுவியுங்கள்' என தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இவ்வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த வர்த்தகர் ஒரு நன்றி கெட்டவர் எனவும், இவர் தான்விடுவிக்கப்பட்டது தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கு நன்றிதெரிவித்ததாகவும் ஊடகவியலாளரான திசரனே குணசேகர 'சண்டே லீடர்'பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதுடன், "கடத்திச் சென்றவர்களுக்குதொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியவர் யார் என்பதை எவ்வாறு தெரிந்துகொண்டிருப்பர்?" என குணேசகர கேள்வியெழுப்பியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையிலும் இது தொடர்பில் எந்தவொருமுன்னேற்றமும் காணப்படவில்லை. ஆங்கில மொழியிலிருந்து சிங்கள மற்றும்தமிழ் மொழிகளுக்கு கூட இவ் அறிக்கையை மொழி பெயர்க்கவில்லை.இந்நிலையில் பெரும்பான்மை சிங்களவர்கள் கூட சட்டப் பாதுகாப்பைக்கொண்டிருக்கவில்லை எனில், சிறுபான்மைத் தமிழ் மக்கள் எவ்வாறு சட்டப்பாதுகாப்பைப் பெறுவதற்கான நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள்?
D.R.கார்த்திகேயன் இந்தியாவில் புகழ்மிக்கவர்களில் ஒருவராவார். இந்தியாவின்முன்னாள் பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி மே 1991ல் தேர்தல் கூட்டம்ஒன்றில் கலந்து கொண்ட போது, தனது இடுப்புப் பட்டியில் குண்டு பொருத்தியபெண் குண்டுதாரி ஒருவரின் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.இக் கொலைச்சம்பவத்தை விசாரணை செய்கின்ற காவற்துறை அதிகாரியாக கார்த்திகேயன்கடமையாற்றியிருந்தார்.
மே 2009 ல் சிறிலங்கா இராணுவப் படையால் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் புலிகளின்பால் கார்த்திகேயன் அனுதாபம் கொண்டிருக்கவில்லை. ஆனால் பெரும்பாலானஇந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களைப் போல கார்த்திகேயனும்சிறிலங்கா அரசாங்கம் யுத்த வெற்றி மூலம் பெற்றுக்கொண்ட மமதை தொடர்பில்கவலையும் அதிருப்தியும் கொண்டுள்ளார்.
"எங்கே அநீதி நிலவுகின்றதோ அங்கே அமைதியும் சமாதானமும் இருக்கமுடியாது" என இவ்வாரம் கார்த்திகேயன் எனக்கு எழுதிய மின்னஞ்சலில்குறிப்பிட்டிருந்தார்.
துப்பறிவாளரான கார்த்திகேயன், மீண்டும் தமிழ்ப் புலிகள் அமைப்பு புத்துயிர்பெறுவார்கள் எனக் கருதுவதற்கான சந்தர்ப்பங்களை பார்க்க முடிகிறது. "சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் போல் சமமாக நடத்தப்படாவிட்டால்,சிறிலங்காவில் மீண்டும் கிளர்ச்சி உருவாவதைத் தடுக்க முடியாது" எனகார்த்திகேயன் கூறுகின்றார்.
No comments:
Post a Comment