சிறீலங்கா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியிருந்த இளைஞர் ஒருவர் யேர்மனியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறீலங்கா ராணுவத்தினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு அதன் விளைவாக குறிப்பிட்ட இளைஞ்ஞன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர் யேர்மனிக்கு அகதி தஞ்சம் கோரி வந்துள்ளார் என்று தெரியவருவதோடு ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இளைஞ்ஞன் இருமுறை தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் அவர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

தேடுதல் என்ற பெயரில் இனவாத சிங்கள ராணுவத்தினரால் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்டு இரகசிய தடுப்பு முகாம்களில் பல நூறு தமிழ் இளைஞ்ஞர்கள் சித்திரவதைகளுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகி அங்கவீனம் அடைந்துள்ளார்கள் என்பதோடு பலர் மனநிலை பாதிக்கப்பட்டும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.