கொழும்பு,மே. - 16 - 1980 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியதாக இலங்கையின் உயரதிகாரி தெரிவித்தார். மூத்த பத்திரிகையாளர் சந்திரபிரேம் எழுதிய கோத்தபயலின் போர் என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி கொழும்பு நகரில் நடந்தது. இதில் இலங்கையின் மிக மூத்த அதிகாரியும், அதிபரின் செயலருமான லலித் வீரதுங்க கலந்து கொண்டு பேசினார். புத்தகத்தில் இடம் பெற்றிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், 1987 ஜூன் மாதத்தில் பூமாலை நடவடிக்கை மூலமும், இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாகவும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தியது என்றார்.
இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றிய தீட்சித்தின் கடுமையான அணுகுமுறை குறித்தும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். 1980 களில் இந்திய உளவுத் துறையின் நிர்ப்பந்தம் காரணமாக முக்கிய குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரை இலங்கை அரசு விடுவிக்க நேர்ந்தது என்றார் வீரதுங்க. எனினும் 2008 ல் ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது இலங்கை அதிகாரிகளுடன் இந்தியா அவ்வப்போது பேச்சு நடத்தியதால் 2006 முதல் 2009 வரையிலான போரை இலங்கை ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது என்று வீரதுங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment