Translate

Sunday 13 May 2012

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குள் பிளவு! தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சியின் இறுதிச்சடங்கில் அம்பலம்


இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குள் பிளவு! தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சியின் இறுதிச்சடங்கில் அம்பலம்
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குள் நிலவும் பிளவுபட்ட நிலையை இது வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் சார்பில் தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சியின் மறைவு குறித்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு அனுதாபச் செய்திகளாலேயே இறுதிச்சடங்கின்போது குழப்பநிலையை  ஏற்படுத்தியுள்ளது. 
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது-

தென்னாபிரிக்காவின் பொதுநிர்வாக அமைச்சராக இருந்த இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிச்சடங்கு கடந்தவாரம் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சியின் மறைவுக்கு கவலை தெரிவித்து இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இரண்டு அனுதாபச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.
ஒன்றை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுப்பியிருந்தார்.
இன்னொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன அனுப்பியிருந்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு அனுதாபச் செய்திகளாலும் தென்னாரிக்க அரச நிகழ்வில் பீரிசா, சஜின் வாஸ் குணவர்த்தனவா இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்ற குழப்ப நிலையை  ஏற்படுத்தியது.
இந்த இரண்டு அனுதாபச் செய்திகளையும் வைத்துக் கொண்டு, தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவின் நெறிமுறை அதிகாரி ஒருவர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் யார் என்று கண்டுபிடிக்க அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்.
கடைசிவரையில் அவரால் இலங்கை வெளிவிவகார அமைச்சர் யார் என்று உறுதி செய்ய முடியாமல் போனது.
இதனால் அந்த நிகழ்வை நெறிப்படுத்திக் கொண்டிருந்த தென்னாபிரிக்காவின் நீண்டகால நிதியமைச்சரும், தற்போதைய திட்டக்குழு அமைச்சருமான ரிவோர் மனுவல் இரண்டு அனுதாபச் செய்திகளையும் வாசித்தார்.
வெளிநாடு ஒன்றின் அரச இறுதிச்சடங்கில்- ஒரே குரலில் அனுதாபத்தை வெளிப்படுத்தத் தவறியதே இந்தக் குழப்பத்துக்கு காரணம் என்று  இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. 
இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்குள் நிலவும் பிளவுபட்ட நிலையை இது அம்பலப்ப்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கை - தென்னாபிரிக்கா இடையிலான உறவுகளின் இடைவெளியை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ள

No comments:

Post a Comment