Translate

Sunday, 13 May 2012

சிறீதரன் எம்பியின் தமிழரசுக்கட்சி கருத்தரங்கிற்கு சென்ற நபருக்கு தர்மஅடி!


சிறீதரன் எம்பியின் தமிழரசுக்கட்சி கருத்தரங்கிற்கு சென்ற நபருக்கு தர்மஅடி!

தமிழரசுகட்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனாதிபதி மஹிந்தவைப் புழந்து தெய்வம் எனக் கூறியவருக்கு தர்ம அடி வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.
ஜனநாயகவளியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வது என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஸ்ட்ட ஆலோசகர் போல் காடர் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய உதவித் தூதர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்இ பொருளியர் ஆசிரியரும்  சட்ட விரிவுரையாளர் குருபரன் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது, கேள்வி நேரத்தின் போது, கருத்துத் தெரிவித்த பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு நபர், இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெள்ளையர்கள் தேவையில்லை. வெள்ளையனே வெளியேறு என்று காந்தி அடிகளே போரிட்டிருக்கின்றார்.
போரில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவே திறமையானவர். அவராலேயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். அவர் போறுதலுக்கு உரியவர் என்று கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
அவர் அவ்வாறு தெரிவித்த போது, மக்கள் கூச்சலிட்டு அவரை உரையாற்றவிடாமல் இடைநிறுத்தியிருக்கின்றனர். நிகழ்வு முடிந்து வெளியேறிய போது அவரைச் சூழ்ந்த நபர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment