யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
படைத்தரப்பே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபடலாமென்ற அச்சத்தில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலானெ கூறுகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கமும் இதே பாணியினில் தாக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment