தன்னை இலங்கை அதிகாரிகள் ஐ.நாவில் வைத்து கிண்டல்செய்தனர் என்றார் ஜொலண்டா

மகிந்தரின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜயரட்ன, கொலைக்களங்களின் தயாரிப்பாளர் காலம் மக்ரே, சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி ஜொலண்டா மற்றும் இலங்கை அரசியல் வாதி என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் அருன் தம்பிமுத்துவும் கலந்துகொண்டார். இதில் பேசிய ஜொலண்டா, தம்மை இலங்கை அரசின் அதிகாரிகள் ஜெனீவாவில் வைத்து கேலிசெய்ததாகத் தெரிவித்தார். 78 பேர் அடங்கிய இலங்கை அரசின் குழு, தம்மையும் தமது அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களையும் அணுகி, இலங்கை அரசின் நிலை தொடர்பாக விளக்க முற்பட்டதாகவும், அதனை ஏற்க்க மறுத்த தம்மை, அவர்கள் கேலி செய்ததாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment