Translate

Sunday 13 May 2012

புலிகள், புலம்பெயர்ந்தோரென அரசு செக்குமாடு போல் சுற்றி வருகிறது


புலிகள், புலம்பெயர்ந்தோரென அரசு செக்குமாடு போல் சுற்றி வருகிறது

எதற்கெடுத்தாலும்   புலிகள்,  புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு  அரசு செக்குமாடு போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக  ஜனநாயகத் தேசிய  கூட்டணி எம். பி. அநுராகுமார திஸாநாயக்க  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ள 17 ஆவது திருத்தம், பொலிஸ் மற்றும் தேர்தல் பொதுச் சபைகளை  நிறுவுவது தொடர்பான சபை  ஒத்திவைப்பு வேளை  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த  அவர்  மேலும் கூறியதாவது ;
இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல்களின் மூலம்  மக்களின்  உண்மையான  கருத்துகள் வெளிவருவதில்லை. ஏனெனில் தேர்தல் முடிவுகள்  மிரட்டல் மூலமும் அராஜகங்கள் மூலமுமே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்கா செல்லவுள்ள அரச  குழு  ஹிலாரிக்குக்  கொடுக்கவுள்ள  அறிக்கை  என்ன? அதில் என்னனென்ன விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதனை  அறியும்  உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு எமது பாராளுமன்றத்தை  விடவும்  ஹிலாரி பெரியவர் அல்ல .  ஜனாதிபதியின்  வெதமுன காணியைப் பற்றியா அங்கு பேசப் போகின்றார்கள் ?
வெளிவிவகார  அமைச்சில்   பெரிய பூதம் ஒன்றுள்ளது. அதுதான்  வெளிவிவகார அமைச்சை ஆட்டுவித்து வருகின்றது. அதனால்தான்  பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எதற்கெடுத்தாலும்  புலிகள், புலம்பெயர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு அரசு செக்று  மாடு போல்  சுற்றிச் சுற்றி வருகின்றது. இதனால்  எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

No comments:

Post a Comment