இரகசிய தடுப்பு முகாமின் இரகசியங்கள் உடைக்கப்படுமா ?
இலங்கையில் போர் முடிவுற்று 3 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தாம் தடுத்துவைத்துள்ள போர் கைதிகள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என இலங்கை பாதுகாப்புச் செயலகம் முதல் தடவையாக தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில், சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது யாவரும் அறிந்ததே. இதில் பலர் காயங்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டனர். அவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இதுவரை இலங்கை அரசு தெரிவித்தது இல்லை. குறிப்பான புலிகளின் மூத்த உறுப்பினர்களான பேபி சுப்பிரமணியம், யோகி, பாலகுமார் மற்றும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த கடாபி போன்றவர்களை இலங்கை அரசு என்ன செய்தது என்பது இதுவரை அறியப்படவில்லை.இது இவ்வாறிருக்க, போரின்போது தம்மால் கைதுசெய்யப்பட்டு இரகசிய தடுப்பு முகாமில் உள்ள அனைவரது விபரங்களையும் தாம் வெளியிட தயார் என நேற்றையதினம்(ஞாயிறு) பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தம்மால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள், தம்மை அணுகி இவர்கள் குறித்து விபரங்களை கோரும் பட்சத்திலேயே, அந் நபட்கள் தொடர்பான விபரங்களை தாம் வெளியிடுவோம் என கோத்தபாய தலைமையில் இயங்கும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே இரகசிய தடுப்பு முகாமில் உள்ள நபர்களின் உறவினர்கள், தயக்கமின்றி இலங்கை அரசிடம் தமது உறவுகள் தொடர்பான விபரங்களைக் கோருவது நல்லது. இதனூடாகவே, இரகசிய தடுப்பு முகாம்களில் யார் யார் எஞ்சியுள்ளனர் என அறியமுடியும்
No comments:
Post a Comment