தர்சானந்த் தாக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம் :
யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் தர்சானந்த் தாக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.அவர் தமது அறிக்கையில் சம்பவம் பற்றி விபரிக்கையில் இன்று காலை (18.05.2012)யில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரும் கலைப்பீட நாலாம் ஆண்டு மாணவனுமான தர்சானந் மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். தலையிலும் கையிலும் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ் மருத்தவ மனையில் சிகிச்சை பெறுகின்றார்.
அவரைச் சென்று பார்த்த பொழுது மகிழ்சிகரமான அவன் முகம் துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தது.இத்தனை ஆயிரம் இராணுவத்தினர் தெருத் தெருவாக நிற்கிறார்கள். காவல்துறையினர் கடமையில் உள்ளனர். இவ்வாறான காவல் இருக்கும்போது கூரிய இரும்பு ஆயுதங்களினால் தாக்கப்பட்டுள்ளார் தர்சானாந்.
அப்படியானால் இலகுவாக குற்றவாளிகள் எப்படித்தப்பித்துச் சென்றார்கள். அது ஒரு திட்டமிட்ட கொலை அச்சுறுத்தலாகும்.இலங்கையில் எல்லாம் முடிந்தது. சமாதானம் வந்து விட்டது. என்ற நிலையில் இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யார்? அதுவும் இன்று பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டமைக்காகக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஈமக்கடன் செய்யவிருந்த நேரத்தில் இப்படித் திட்டமிட்டு வன்முறையைத் தோற்றிவிப்பதன் பின்னனி என்ன ?
அதுவும் மாணவர்களை வன்முறையிலிருந்து; பாதுகாப்புத் தேடத் தூண்டுகிறார்களா? இங்கே ஆட்சியில் உள்ளவர்கள் பதில் சொல்ல வேண்டும். குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின்; முன் நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க உயர் கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகின்றேன என்றுள்ளது.
No comments:
Post a Comment