இலங்கையில் உள்ள மாகாணங்களில் எல்லைகளை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தது அரச உயர்மட்டத்தில் தற்போது விசேட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சகல மாகாணங்களுக்கும் கடல் பிரதேசம் ஒன்று வழங்கப்படும் வகையில் மாகாண எல்லைகள் பிரிக்கப்பட உள்ளன. அத்துடன் அனைத்து மாகாணங்களுக்கும் மலையக பிரதேசங்களின் பகுதிகளும் வழங்கப்பட உள்ளன. நிலைத் தொடர்பற்ற வகையில் இந்த எல்லைகள் நிர்ணயிக்கப்பட உள்ளன. நாட்டின் தேசிய வளங்கள் அனைத்து மாகாணங்களுக்கு சமமான வகையில் பகிரப்படுவதற்கும், மாகாணங்களுக்கு இடையில் காணப்படும் சிக்கல் நிலைமைகளை குறைப்பதற்காகவும் இந்த புதிய எல்லை நிர்ணயிப்பு மூலம் தீர்வு கிடைக்கும் என அரசாங்கம் கருதுகிறது.
இவ்வாறு எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இன ரீதியான பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அரசாங்கம் பிரதானிகள் நம்பிக்கை வெளியிட்;டுள்ளனர்.
No comments:
Post a Comment