இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நாட்டின் பிரதான ஐக்கிய தேசிய கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் மே தினத்தை நடத்துவதற்கு ஒழுங்கு செய்திருக்கின்றன.
"தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும், ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தினத்தில் கலந்து கொள்வது என்று ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முடிவின் மூலம் இந்த நாடு ஓர் ஐக்கியப்பட்ட நாடு என்பதை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது", என யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
புறக்கணிக்கிறது டெலோ
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ இந்த கூட்டு மே தின கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்ட முடிவுக்கமையவே தாங்கள் இந்த மே தின கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாக அந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்), தலைவர் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி ஆகியோர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா, மன்னார் மாவட்டங்களில்n நடத்துகின்ற கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

"ஆளும் கட்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே பேரினவாதக் கட்சிகள்தான். அவைகள் இன்னும் பேரினவாத சிந்தனையில் இருந்து இன்னும் விடுபடவில்லை. இந்தக் கட்சிகளின் கடந்தகாலச் செயற்பாடுகளை எமது மக்கள் மறந்துவிடவில்லை. இதன் அடிப்படையில் வடகிழக்கு மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களாக எமது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எங்களால் முடிவெடுக்க முடியாது. தமிழ் மக்களின் எதிர்காலத்துடன் விளையாடவும் முடியாது. எனவே தான் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று டெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment