Translate

Tuesday, 1 May 2012

’’உச்சிதனை முகர்ந்தால்’’ திரைப்படத்துக்கு ‘நள்ளிரவுச் சூரியன்’ விருது


’’உச்சிதனை முகர்ந்தால்’’ திரைப்படத்துக்கு ‘நள்ளிரவுச் சூரியன்’ விருது

’’உச்சிதனை முகர்ந்தால்’’ சாதாரண திரைப்படமல்ல அது ஒரு இன மக்களின் உணர்வு. நாம் தமிழனாக வாழப்போகிறோமா அல்லது அடிமையாய் சாகப்போகிறோமா என்ற கேள்வியை நாம் அனைவரும் கேட்கவேண்டும் கேட்க வேண்டிய கேள்வியை எழுப்புகின்றது.
இலங்கை இராணுவம் அசிங்கமான கொடூரத்தின் உச்ச கட்டத்தை அடைந்து ஒரு இனத்தை எப்படி சீரழித்தார்கள் என்ற உண்மையையும், தமிழீழத்தின் மட்டக்களப்பில் அழிந்த ஒரு குடும்பத்தின் உண்மையை கதையையும் தமிழக மக்கள் பல தடைகளையும் மீறி தமிழீழ மக்களுக்கு கொடுக்கும் ஆதரவு கரங்களின் அர்ப்பணிப்பும் தான் உச்சிதனை முகர்ந்தால்.

`தமிழனாய் நாம் இனிமேலும் தலைகுனிந்தோ கை நீட்டியோ வாழ முடியாது’ என்று ஒவ்வொருவரிடமும் அவரது மனசாட்சியிடம் கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் அதற்குரிய பதிலையும் அளிக்கிறது இந்தத் திரைப்படம்.
சினிமாவுக்கான சமரசங்கள் இதில் எதுவும் இல்லை. இது ஒரு ஈழதமிழ் சிறுமியின் காவியம். இத்திரைப்படத்திலுள்ள நிஜம் அனைவரின் மனதையும் உலுக்கப் போகிறது என்பதை விட உறக்கம் கெடுக்க வைத்து உள்ளம் குமுற வைக்கும் என்பதுதான் உண்மை.
2012-ம் ஆண்டிற்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25 ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தொடங்கியது. குறும்படங்களுக்கான விருதுகள் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டன. ’’உச்சிதனை முகர்ந்தால்’’ திரைப்படத்துக்கு ‘நள்ளிரவுச் சூரியன்` விருது வழங்கப்பட்டது.
சிறந்த கதை என்பதால் கதாசிரியர் புகழேந்தி தங்கராஜா அவர்களுக்கும், சிறந்த பாடலாசிரியர் காசி ஆனந்தன் அவர்களுக்கும், புதுமுகம் நீனிகா அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டு, நள்ளிரவுச் சூரியன் என்ற விருதை உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment