Translate

Tuesday 15 May 2012

வீசா நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கவும், மேன்முறையீடு வேண்டாம்!- பிரித்தானியா

வீசா நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கவும், மேன்முறையீடு வேண்டாம்!- பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள தமது உறவுகளை குறுகிய கால அடிப்படையில் பார்க்க விரும்பி அங்கு வரவிரும்புவோரின் வீசா நிராகரிக்கப்பட்டால்,அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 
தமது வீசாக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் செலவீனம் என்பவற்றை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய குடிவரவுத்துறை அமைச்சர், டேமியன் கிரீன், எதிர்வரும் காலங்களில் வீசாக்களுக்காக மேன்முறையீடு செய்வதன் காரணமாக பிரித்தானியாவில் உள்ள தமது உறவுகளை பார்க்க விரும்புபவர்கள் தமது மேன்முறையீட்டுக்கான முழு உரிமைகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
எனினும் வீசா நிராகரிக்கப்படுவோருக்கான மேன்முறையீட்;டு வாய்ப்பு,மனித உரிமைகள் மற்றும் இனப்புறக்கணிப்பு என்ற அடிப்படையில் வரையறைக்குட்பட்ட வகையில் நடைமுறையில் இருக்கும் என்றும் கிரீன் குறிப்பிட்டுள்ளார்.
வீசா நிராகரிக்கப்படுவோர் மேன்முறையீடு செய்வதன் காரணமாக பிரித்தானியாவின் வரிசெலுத்துவோர், வெளிநாட்டவர்கள் தொடர்பில் பாரிய செலவீனங்களை பொறுப்பேற்க வேண்டியுள்ளனர்.
எனவே இதனை தடுக்கும் முகமாகவே வீசா நிராகரிக்கப்படுவோர் மீண்டும் புதிய வி;ண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவதாக பிரித்தானிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்
2011 ஆம் ஆண்டில் மாத்திரம் வீசா மேன்முறையீடுகள் என்ற வகையில் 50 ஆயிரம் விண்ணங்கள் கிடைத்தன.
இவற்றை பார்வையிட்டு பரிசீலனை செய்வதற்காக, வருடம் ஒன்றுக்கு பிரித்தானிய அரசாங்கத்துக்கு 29 மில்லியன் பவுண்ட்ஸ்கள் செலவாவதாக குரவரவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment