Translate

Tuesday 15 May 2012

தெரிவுக் குழுவில் பங்கேற்க கூட்டமைப்பு தயார்


நிபந்தனையின்பேரில் இலங்கை அரசின் தெரிவுக் குழுவில் பங்கேற்க கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்துவதற்கு கூட்டமைப்பு எப்போதும் இதயசுத்தியுடன் செயற்படுவதை இதன்மூலம் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த முடியும்.

இவ்வாறு நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவுக்குழு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன.
நாடாளுமன்ற தெரிவிக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் வெற்றுத்தாளுடன் நாங்கள் செல்ல முடியாது. நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றொம்.
இதேவேளை, அண்மையில் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் முடிவேதும் எடுக்கப்படாத நிலையில் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பு எடுக்கவுள்ள நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment