Translate

Tuesday 1 May 2012

ஐ.நாவில் பிரச்சினை எழுப்புமாறு கொகன்னவுக்கு பீரிஸ் உத்தரவு


சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி சிறிலங்கா அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மனிதஉரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகவும் பான் கீ மூன் இந்திய ஊடகச் செவ்வியில் கூறியிருந்தார்.

அத்துடன் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
பான் கீ மூனின் இந்தக் கருத்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா பொதுச்செயலரின் இந்தக் கருத்து நியாயமற்றது என்றும், இதனை விடுதலைப் புலிகள் தமக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.
இதையடுத்து, பான் கீ மூனின் பொருத்தமற்ற இந்தக் கருத்துகள் தொடர்பாக, ஐ.நாவிடம் கேள்வி எழுப்புமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியுயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்னவுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment