ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு விஜயம்
![<p>Flag of European Union</p>](http://rste.org/wp-content/uploads/2011/05/flag-EU-300x240.jpg)
பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட், ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ் மற்றும் லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவே இன்றைய தினம் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இவர்களது வருகையானது ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகளின் ஊடாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவும், ஆளும், எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும் நோக்கிலுமே உள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment