இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதிகளினதும் மத-மிதவாதிகளினதும் திட்டமிட்ட சுரண்டலும் தீண்டலும் கண்டி முஸ்லிம் கலகத்திலிருந்து இன்று வரை தொடர் கதையாகிக் கொண்டே செல்கின்றது.
கண்டி கலகத்திற்கு முற்பட்ட காலத்தில் சில பதிவுகள் இருப்பினும் வரலாற்று ரீதியாக பெரிதளவில் பேசப்பட்ட நிகழ்வு கண்டி கலகம்தான். அதற்கு காரணம் முஸ்லிம்களின் சமய அனுஷ்டானத்துடன் தொடர்புபடுத்தி குறிப்பிட்ட கிளர்ச்சி ஏற்பட்டமையே ஆகும். அதன் பரிணாம வளர்ச்சி இன்று தம்புள்ளை முச்சந்தி வரை முன்னேறியிருக்கின்றது.
அத்துடன் இன்னும் பல நாற்சந்திகளை கடந்து தீவு முழுவதும் தீவிரவாதமாக பிறப்பெடுப்பதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாயல் சம்பவத்தின் பின்ணியினை உற்று நோக்குகின்ற போது சிங்கள விஷமிகளால் நன்கு தயார்படுத்தப்பட்டு திட்டமிட் அடிப்படையில் அது அரங்கேற்றப்பட்டமை தெளிவாக புலப்படுகின்றது. இதன் மறுபுறத்தில் தம்புள்ளையை பிறப்பிடமாக கொண்ட அனைத்து சிங்கள சகோதரர்களும் ஒரே மனோநிலையிலும் சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் தீனியில் வளர்ந்தவர்கள் என்றும் பொருள் கோடல் செய்ய முடியாது. காரணம் தம்புள்ளை பள்ளிவாசலின் தோற்றம் பின்னணி வரலாறு பற்றி சில முஸ்லிம் சகோதர்கள் அறியாததெரியாத பல உண்மைகளை சிங்கள சகோதரர்கள் சான்றுகளுடன் பகிரங்கமாக சமர்ப்பிக்கின்றனர். இதற்கு சில நல்லுள்ளம் கொண்ட அரசியல் வாதிகளும் விதிவிலக்கு அல்ல.எது எவ்வாறு இருப்பினும் குறிப்பிட்ட தம்புள்ளையில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லம் உடைக்கப்பட்டமை தொடர்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளின் வகிபங்கு எவ்வாறு காணப்பட்டது காணப்படுகின்றது எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட போகின்றார்கள் என்பதை வைத்து சில வெற்று அரசியல் வாதிகளினதும்இ சிங்கள் பேரினவாதத்தின் உத்தியோகபூர்வ முகவரிகளாக இருப்பவர்களினதும் சமகால சுயரூபத்தினை பற்றியும் சிறு சொல்லாடல் அவசியமாக இருக்கின்றது.
குறிப்பிட்ட நிகழ்வினைத் தொடர்ந்து உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற சிலர் உள்ளனர். உடனடியாக சென்றவர்களில் பிழையான தகவல்களை வழங்கி முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்தவர் என பெயர் பெற்றவர் உள்ளனர். இன்னும் சிலர் சம்பவத்தினை பக்குவமாக ஆராய்ந்து நேரில் சென்று சம்பந்தபடப்ட இரு தரப்புடனும் பேசிவிட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறும் தறுவாயில் உள்ளார்கள் என பட்டம் வழங்கப்படும் அளவிற்கு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அரப்பினரையம் விமர்சித்து கதைப்பவர்கள் உள்ளனர்.
இவை யாவற்றுக்கும் புறம்பாக இன்னுமொரு குழு உள்ளது. அவர்கள் இது வரை குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக எந்த ஓர் மூச்சுப் பேச்சும் இல்லாமல் மௌன வாதத்தில் உள்ளவர்கள்.
மௌன வாதம் பூண்டுள்ளவர்களும் திகாமல்ல மாவட்தை சேர்ந்தவர்கள் ப்ற்றி கட்டாயம் அலச வேண்டியது காலத்தின் தேவை காரணம் முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழ்கின்ற மாவட்டம் இது. இன்று தம்புள்ளைஇ நாளை காத்தான்குடி நாளை மறுதினம் கல்முனைஅக்கரைப்பற்ற என இதர முஸ்லிம் கிராமத்திற்கு இக்கொடூர இன வன்முறைச் செயற்பாடு இம் பெறலாம் என ஊகிப்பதனை யாரும் மறுதலிக்க முடியாது.
திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆளும் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற இரு முஸ்லிம் அரசியற் கட்சியின் பிரதிநிதிகள் தெளிவாக பேச வேண்டி உள்ளது. அதில் முதலாவது தேசிய காங்கிரஸ் இரண்டாவது முஸ்லிம் காங்கிரஸ்.
தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் இலங்கைத் திருநாட்டின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர். அதிமேதகு ஜனாதிபதியினை தனது காலடிக்கு அழைத்து வந்து தனது கட்சியின் தேசிய மகாநாட்டை நடாத்தி அதற்கு பகரமாக ஜனாதிபதியினால் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டவர். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை தொடர்பாக அன்று பேபசியமைக்காக பிரபாகரனின் கொலைப்பட்டியலில் தனது பெயரையும் சேர்த்துக் கொண்டவர் இன்று வாய் மூடி மௌனியாக இருக்கின்றார்.
குறிப்பிட்ட நிகழ்வு இடம்பெற்று சுமார் ஒரு வார காலம் கழிந்த பின்பும் இதுவரை மௌனவிரதப் பூண்டு கொண்டு இருப்பதன் மாயம் என்ன என மக்கள் வினவுகின்றனர். இதே போன்று பொத்துவில் முஸ்லிம்கள் படுகொடை செய்யபடப்டமைக்காக அன்று அமைதியாக இருந்தமைக்கு பிரதிஉபகாரமாக தனது கிராமததிற்கு அபிவிருத்திகளைக் கொண்டு வந்து குவித்தவர் இன்று தம்புள்ளையிலும் இறை-இல்லம் உடைக்கப்பட்டமையின் ஊடாக முஸ்லிம் சமூகத்தை வீதியோரத்தில் விலை பேசி விற்று விட்டு அதற்கும் பகரமாக இன்னும் இதர வசதி வாய்ப்புக்களை அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறாரா? என வினவுகின்றனர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவரினால் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி ஓர் ஆயுதம் தாங்கிய பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக பேச முடியும் என்றால் ஏன் காவியுடையணிந்த குறிப்பிட்ட சில சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக பேசமுடியாது... விடுதலைப்புலிகளை விட இவர்கள் ஆபத்தானவர்கள் என பட்டம் வழங்குகின்றாரா? அல்லது தம்புள்ளை விகாரையின் விகாராதிபதி கூறியதைப் போன்று தமிழ் பயங்கரவாதம் தோற்கடிக்கட்டு விட்டது அதே போன்று முஸ்லிம் பயங்கரவாதமும் விரட்டியடிக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை இவர் வழி மொழின்றாரா... மனு நீதியில் இவர்கள் தப்பினாலும் மறை நீதியினால் தண்டிக்கப்படுவார்கள் என்பது திண்ணம்.
அடுத்த உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான மக்களால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ ஆளும்கட்சியில் உள்ளாhரா? எதிர்க் கட்சியில் உள்ளாரா? என மக்கள் மனதில் கேள்வி எழுப்பும் அளவிற்கு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக அரசுக்கு அதி உயர்ந்தபட்ச அழுத்தத்தினை வழங்கும் போது அவர்களின் மௌனமும் திகாமடுல்ல வாழ் முஸ்லிம்களின் உள்ளத்தில் பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
இவர்களும் மதம் மாறிவிட்டனரா என மக்கள் விசனப்படுகின்றனர் காரணம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அரசாங்கத்தில் தானும் தனது கட்சியும் இணைவதற்கு காரணமான முக்கிய 02 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரந்ததாகவும்... அவர்களின் அரசின் உயர் மட்டங்களில் தனியான உறவுகளை வைத்துக் கொண்டிருந்தாகவும் இக்கட்சியில் மேலும் ஓர் பிளவு ஏற்படுவதனை தவிர்க்கும் முகமாகவும் அரசுடன் இணைந்ததாகவும் அதன் விளைவாக அரசியமைப்பின் 18 வது சீர்திருத்தத்திற்கு வாக்களித்து ஜனாதிபதியின் அதிகாரப் பரப்பை விஸ்தரித்து அதன் விளைவை சமகாலத்தில் அனுபவிப்பதாகவும் பகிரங்கமாக மக்கள் மத்தியில் பல தடவை கூறி உள்ளார். இதன் அர்த்தம் குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பிர்களுக்கு தம்புள்ளை விவகாரம் தொடர்பான அரசின் செயற்பாட்டில் இரட்டிப்பான பொறுப்பினை கூறும் தறுவாயில் உள்ளனர் என கூறுகின்றாறா? அல்லது இதவர்களின் கடந்தகால துரோகத்தனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியினால் பாராளுமன்றம் செய்றவர்கள் அதிமேதகு ஜனாதிபதியின் நெருங்கிய தொடர்பனை வைத்துக் கொண்டிருப்பது பெருமைக்கு உரிய விடயம்தான். அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் சிலரின் பிறந்த தினத்தை ஜனாதிபதி நினைவில் வைத்திருந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு கையடக்கத் தெலைபேசி அமைப்பை ஏற்படுத்தி அது வழமை போல் செயலிழந்து கடந்ததும் வீட்டினை தெலைபேசிக்கு அமைப்பை ஏற்படுத்தி வாழ்தது தெரிவிக்கு அளவிற்கு நெருக்கம் உள்ளது. இவற்றினை தம் குடும்ப உறவினை அமைத்து சென்று புகை;பபடம் பிடிப்பதற்கும்இ அதனை பத்திரிகையில் வெளியிடுவதற்கும் மாத்திரம் இந்த நெருக்கத்தை பய்னபடுத்தாது முஸ்லிம் சகோதரத்துவத்தின் இருப்புக்கள் சிங்கள பேரினவாதிகளினால் கேள்விக் குறியாக்கப்படும் போது பயன்படுத்துமாறு மக்கள் விரும்புகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவைரர் மௌனமாக ருப்பின் இவர்கள் அடக்கிவாசிப்பதில் ஏதும் நியாயம் காணலாம் இன்று தலைவர் கொண்டுள்ள அக்கறையின் ஏனையவர்களின் செயற்பாட்டில் காணமுடியவில்லை என்பது சந்தேகத்தை தோற்று வித்துள்ளது. பிரதியமைச்சுப் பதவி தொடர்பாக ஏதுமுபயம் இருபின் இறைவன் நாடினால் இன்னும் பல அமைச்சுப்பதவிகளை வாழங்குவான் ஏன வீதியோர நண்பர்கள் கூறுகிறார்கள்.
இறுதியாக மக்கள் இலங்கைத் தீவின் நாலபுறமும் உன்னிப்பாக அவதானிததுக் கொண்ருக்கிறார். இந்த இறைவனின் முஸ்விம் சமூகத்தின் உரிமையைக் கேட்க அனைத்து தனிநபர்களினதும் அமைப்புக்களினதும் பட்டியல்படுத்தி வைத்திருக்கின்றார்கள் இறுதியில் பிரச்சினை தீர்வு காணப்படும் அதில் பங்கு கொள்ள மாத்திரம் முடியடிக்கும் புகைப்பட பிரியர்களின் புகழேந்திகளையும் மக்கள் மன்று அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
இதன் பெறுபேற்றினை மறு தேர்தல் உங்களுக்கு உணர்த்தும் முன் உங்களின் மௌன வேசத்தையும் இரட்டை வேடத்தையும் களைந்து உண்மையான பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகளாக செயற்பட்டு நாளை காத்தான்குடி கல்முனைஇ அக்கரைப்பற்று போன்ற கிராமங்களின் பள்ளிவாயல்களை காப்பாற்ற இன்னே உங்களின் பங்களிப்பை தம்புள்ளையினை நோக்கி குறிக்குமாறு திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.
சங்கதிக்காக மன்னார் செய்தியாளர்
No comments:
Post a Comment