
இலங்கையின் உடைந்துபோகும் வாக்குறுதிகள் தொடர்பில் இந்தியா புதிய நிலைப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய இணைத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக 13 ஆம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணப்போவதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உலகத்தில் எங்கும் காணப்படாத குறிப்பாக,உள்ளுரில் உருவாக்கப்பட்ட தீர்வே காணப்படும் என்றும் அவர் கூறிவருகிறார்.
இந்தநிலையில், அவர் ஏற்கனவே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கைக்கு சென்ற போது 13 க்கு அப்பால் சென்று தீர்வை வழங்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை கிருஸ்ணாவும் பிரசித்தமாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். ஆனால் அவர் இந்தியாவுக்கு சென்ற பின்னர் அவ்வாறான உறுதிமொழியை தாம் வழங்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவ்ராஜிடமும் காலை உணவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஆனால் சுஸ்மா இந்தியாவுக்கு சென்ற பின்னர் மஹிந்த ராஜபக்ச, அவ்வாறான உறுதிமொழி ஒன்றை தாம் வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
எனவே இந்தியாவை இலங்கை பல தடவைகள் முட்டாளாக்கியுள்ளது என்பது உண்மை. எனவே இந்தியா இலங்கை விடயத்தில் தமது புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment