தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தி வந்தோம்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
தேசிய நல்லிணக்கம் நாட்டில் உருவாக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,அரசாங்கத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எம்மால் காண முடியவில்லை.
சிங்கள மக்களின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரத் பொன்சேகாவை அரசாங்கம் நிபந்தனையின்றி விடுதலை செய்யப் போகின்றது.
தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது. அதை விடுத்து தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பேசுவதால் எதுவும் நடைபெறப்போவதில்லை.
எனவே, அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என புளொட் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment