கடந்த முப்பதாண்டுக் காலம் தமிழ் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணமாக அமைந்தது. இதே அழிவை மீண்டும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த நினைக்கும் பிரிவினைவாத சக்திகளை நாட்டை விட்டு அடியோடு தூசு தட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தலைநகரில் அரசுடன் இணைந்து இன்று மே தின நிகழ்வுகளை நடத்துகின்றோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய பிரிவினைவாத அமைப்புகளுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வுகளை நடத்துவதாக கூறி இன மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். கடந்த காலத்திலும் இதே போன்று புலிகளின் பின்னால் சென்றமையாலேயே ஐ.தே.க. அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டது. எஞ்சியிருக்கும் ஆதரவையும் இல்லாமல் ஆக்கிக்கொள்ளவே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார்.
எவ்வாறாயினும் நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. மறுபடியும் நாட்டிற்கு எதிரான சக்திகளை தலைதூக்க விடாது செயற்பட வேண்டும் எனக் கூறினார். __
No comments:
Post a Comment