நேற்று பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக்கினால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
2011ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர் புனரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட சமூகத்துடன் இணைக்கப்படுகின்றனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும், அவை இன்னும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏராளமானோர் போரின் போது கைது செய்யப்பட்டு இன்னமும் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் இன்னமும் முன்னேற்றம் காணவில்லை. பேச்சு சுதந்திரத்துக்கு இன்னமும் கட்டுப்பாடு உள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
அத்துடன் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் இன்னமும் உரிய பொறுப்புக் கூறலை வழங்கவில்லை.
இந்த நிலையில் 2012ஆம் ஆண்டிலாவது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரித்தானியா நம்புகிறது. அதற்கான உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளது.
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. பலர் தொடர்ந்தும் கடத்திச் செல்லப்படும் நிலை காணப்படுகிறது. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. 2011ஆம் ஆண்டில் மட்டும் 6000 சிறுவர்கள் வர்த்தக ரீதியாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக இலங்கையின் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்ட சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விடயத்தில் முன்னேற்றம் இல்லை. இதற்கு மத்தியில் வடக்கில் சிங்கள மயப்படுத்தல் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழும் இடங்களில் புத்தரின் சிலைகளும் பௌத்த விஹாரைகளும் அமைக்கப்படுகின்றன. வடக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இலங்கையின் பொது நிர்வாக மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் தமிழ் மொழிப் பயன்பாடு உரிய முறையில் மேம்படுத்தப்படவில்லை. இதன் மூலம் இனங்களுக்கிடையில் இணக்கங்களை ஏற்படுத்த முடியும்.
இதேவளை, பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அகதிகள் இலங்கையில் துன்புறுத்தப்படுவதாக எவ்வித சான்றுகளும் எமக்குக் கிடைக்கவில்லை. ___
No comments:
Post a Comment