Translate

Wednesday 16 May 2012

புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கைது செய்யப்படவில்லை: கருணா

மட்டக்களப்பில் முன்னாள் விடுதலைப்புலிஉறுப்பினர்கள் யாரையும் கைதுசெய்ய எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெஇலங்கை அமைச்சர் கருணா என்கிவிநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அவ்வாறு யாரும் கைதுசெய்யப்பட்டிருந்தாலஅது தொடர்பில் தம்மைத் தொடர்பகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைபபிரதேசமான வடமுனை மற்றுமஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு செ‌ன்ற அமைச்சர் முரளிதரன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களநடத்தினார்.

அண்மையில் இப்பகுதியை தாக்கிய சூறாவளி காரணமாக பலரபாதிக்கப்பட்டனர். இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவஅமை‌ச்ச‌ர் கருணா‌ அப்பகுதி‌க்கு செ‌ன்றா‌ர்.

அ‌ப்போது, வடமுனைப் பகுதியில் சிவிலுடையில் படைப்புலனாய்வுததுறையினரும் போ‌லீஸாரும் இணைந்து முன்னாள் விடுதலைப்புலிஉறுப்பினர்கள் தொடர்பில் அப்பகுதியில் விபரங்களை சேகரிக்கும் பணியிலஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தாம் அச்ச நிலையில் உள்ளதாகவுமஅப்பகுதி மக்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

“திடீரென வந்தவர்கள் இங்குள்ள வீடுகளுக்கு சென்று, குறித்த நபர்களதொடர்பிலான விபரங்களை சேகரித்துள்ளதுடன் அவர்களை போ‌லீஸநிலையத்துக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இது எங்களை பெருமஅச்சத்தில் ஆழ்த்தியுள்ளது” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்களின் முழு விபரங்களையும் பெறுவதுடன் தமது கழுத்திலஇலக்க தகடு ஒன்றை தொங்க விட்டு தம்மை புகைப்படம் எடுத்துசசெல்வதாகவும் பொதுமக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

அ‌ப்போது பே‌சிய அமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, விடுதலைப்புலிகளில் இருந்தபிரிந்தவர்களுக்கான தொழிற் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டவருகின்றன. அதில் அவர்களை ஈடுபடுத்துவதற்காகவே இந்த ‌விவர‌ங்க‌ள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொந்த விருப்பங்களின் மத்தியிலேயஅவ்வாறான தொழிற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். யாரும் கைது செய்யப்படவோ அல்லது பிடித்துச்சென்று வலுக்கட்டாயமாக பயிற்சிகளமேற்கொள்ளவோ மாட்டாது. அவ்வாறா சம்பவங்கள் இனியொருபோதுமநடைபெறாது.

இது குறித்து யாரும் அச்சமோ சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை.இவ்வாறான நடவடிக்கைகள் விபரங்களை பெறுவதற்காக மட்டுமமேற்கொள்ளப்படுகின்றன. யாரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்உறுதிமொழியை இராணுவக் கட்டளைத் தளபதி எனக்கு தந்துள்ளார்.அவ்வாறு யாரும் கைது செய்யப்பட்டால் நீங்கள் என்னுடனதொடர்புகொள்ளலாம். அது தொடர்பில் நான் நடவடிக்கையெடுப்பேன் எ‌ன்று அமை‌ச்ச‌ர் கருணா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment